ரஜினி படம் பார்த்துட்டு அவருக்கிட்டேயே படம் சரியில்லன்னு சொன்ன இயக்குனர்… நடந்தது இதுதான்..!

Published on: April 17, 2024
Lingusamy, Rajni
---Advertisement---

இயக்குனர் லிங்குசாமி தமிழ்சினிமாவில் ரன், பையா உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியவர். இவரிடம் சித்ரா லெட்சுமணன் சினிமா அனுபவங்கள் குறித்து கேட்கையில் இவ்வாறு சொல்கிறார்.

நான் பார்க்குறது நல்ல படமா இருந்தா அன்னைக்கே போன் செய்துடுவேன். டைரக்டர், புரொடியூசர் யாரா இருந்தாலும் தேடிப் பிடிச்சி போன் பண்ணுவேன். அது ரஜினி சாரோட படமா இருந்தர்லும் சரி. லிங்கா படம் பார்த்தேன். அன்னைக்கே போன் பண்ணினேன்.

அப்படி சொன்னா கொஞ்ச பேர் தான் சேர்த்துப்பாங்க. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தைப் பார்த்ததும் நான் ரஜினி சாருக்கிட்டேயே சொன்னேன். படத்துல கிளைமாக்ஸ் தப்பா இருக்குன்னு. சார் என்னை அவ்ளோ மதிப்பாரு. அவருக்கிட்ட நான் உண்மையைத் தான் சொல்லுவேன்னு தெரியும். சௌத்ரி சாரு அவருக்கிட்ட யாருமே படம் நல்லாலன்னு சொல்ல பயப்படுவாங்க. நான் அப்ப தான் அசிஸ்டண்டா இருக்கேன்.

Linga
Linga

உன்னைக் கொடு என்னைத் தருவேன் படம் பார்க்கும் போது என்னால உட்காரவே முடியல. ஆனா அவரு வரும்போது எல்லாருமே சூப்பர் சார்னு சொல்றாங்க. ஆனந்தம் படத்துக்கு அப்போ தான் கமிட்டா ஆயிருக்கேன். எங்கிட்ட கேட்டாரு. என்னய்யா அமைதியாவே இருக்கன்னாரு. அப்புறம் படம் பிடிக்கலையான்னு கேட்டாரு. படம் நல்லால சார்னு சொன்னேன். என்னய்யா நீ எல்லாம் எப்படிய்யா படம் எடுக்கப்போறேன்னு கேட்டாரு. படம் சூப்பரா இருக்குன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்கய்யான்னாரு.

இதையும் படிங்க… ஒரே தீபாவளிக்கு ரிலீஸான கமல்ஹாசனின் நான்கு திரைப்படங்கள்…இதில் எந்த படம் சூப்பர்ஹிட் தெரியுமா?

அப்போ ஒரு அசிஸ்டண்ட் கிட்ட கேட்டாரு. படம் நல்லாருக்கு சார். அவன் என்னமோ சொல்றான்னாரு. அப்புறம் அவரு எங்கிட்ட வந்து படம் நல்லா இல்லேன்னாலும் நல்லாருக்குன்னு சொல்லணும்யா… உன் மேல சாரு செம காண்ட்டா இருப்பாரு. ரெண்டு நாள் நீ ஆபீஸ்சுக்கே வர முடியாதுன்னாரு. அப்புறம் பார்த்தா நான் மட்டும் தான் ரெண்டு நாளா ஆபீஸ்ல இருக்கேன். சௌத்ரி சார் அப்படியே பேப்பரைப் பார்த்துக்கிட்டு லைட்டா ஒரு சிரிப்பு சிரிச்சாரு. நீ சொன்னது தான்யா கரெக்ட்டுன்னு சொன்னாரு.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.