குருவுக்காக சிஷ்யன் செஞ்ச வேலையை பாருங்க.. ஷங்கர் இல்லத் திருமணத்தில் முகத்திரையை கிழித்த அட்லீ

Published on: April 18, 2024
atlee
---Advertisement---

Shankar Atlee: சமீபத்தில்தான் இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் என கைவசம் இருபெரும் படங்களை வைத்திருக்கும் ஷங்கர் தனது மூத்தமகளின் திருமணத்தை தடபுடலாக நடத்தியிருக்கிறார்.

ஏற்கனவே திருமணமாகி அந்த மணவாழ்க்கையில் இருந்து விடுபட்டு வந்த தன் மகளுக்கு தனது உதவியாளரை திருமணம் செய்து வைத்திருக்கிறார் ஷங்கர் என்ற செய்தி ஒரு பக்கம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:சத்தமில்லாத எண்ட்ரி… இந்த வார ஓடிடி ரிலீஸில் இத்தனை படங்களா? சுவாரஸ்ய அப்டேட்…

கோலிவுட் மட்டுமில்லாமல் பாலிவுட், டோலிவுட் என இந்திய சினிமாவில் இருக்கும் முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் ஷங்கர். அவர் அழைப்பை ஏற்று அனைவரும் ஷங்கர் இல்லத்திருமணத்திற்கு வருகை தந்தனர். ரஜினி, கமலில் இருந்து ரன்வீர் சிங் வரை அனைவரும் வந்து திருமண விழாவை சிறப்பாக்கினர்.

இதில் ஷங்கர் இளையமகளும் நடிகையுமான அதிதியும் கொண்டாட்டத்துடன் ஆட்டமும்பாட்டமுமாக மிகவும் ஜாலியாக இருந்தார். இந்த நிலையில் ஷங்கரின் உதவியாளரும் இயக்குனருமான அட்லீயும் ஷங்கரின் இல்லத்திருமண விழாவிற்கு வந்திருந்தார்.

இதையும் படிங்க: ஆச்சி மனோரமாவை நம்ப வைத்து ஏமாற்றினாரா நாகேஷ்!.. வெளியே வந்த ரகசியம்!..

அதுமட்டுமில்லாமல் அட்லீயும் ரன்வீர் சிங்கும் இணைந்து மிகவும் ஜாலியாக ஆட்டம் ஆடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அந்த வீடியோதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இதுவரை பார்க்காத அட்லீயை பார்த்த மாதிரி அந்த வீடியோவில் வடிவேலு டான்ஸ் எல்லாம் ஆடி சுற்றி இருக்கிறவர்களை ஆச்சரியப்பட வைத்தார்.
இப்படியும் அட்லீ ஆடுவாரா என்ற தொணியில் அவர் டான்ஸ் இருந்தது,

இதோ அந்த லிங்க்: https://www.instagram.com/reel/C55S6A2x8CK/?utm_source=ig_web_copy_link