Connect with us
vishal

Cinema News

அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது! வேற மாதிரி ஆயிடும்.. பயில்வானை மூக்குடைத்த விஷால்

Actor Vishal: தமிழ் சினிமாவில் புரட்சித்தளபதியாக வலம் வருபவர் நடிகர் விஷால். தற்போது விஷால் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில்தான் நடந்து முடிந்தது. அதுமட்டுமில்லாமல் பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் விஷால் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு பதில் கூறினார்.

மேலும் ரத்னம் என்ற பெயரிலேயே ரத்தம் இருக்கிறதே? இந்த படமும் ரத்தமும் வெட்டுக்குத்தும் கலந்த படமாக இருக்குமா என்று ஹரியிடம் ஒரு நிருபர் கேட்டார். அதற்கு ஹரி எத்தனையோ அடிதடிகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதை எதிர்த்து யாரும் கேள்வி கேட்பதில்லை. வீடியோக்கள் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவடுவதைதான் வழக்கமாக கொண்டிருக்கிறோம்.

இதையும் படிங்க: கர்ப்பத்தினை கன்பார்ம் செய்த ராதிகா… ஷாக்கான கோபி… கலாய்த்த ராமமூர்த்தி..

அதனால் அதை எப்படி எதிர்க்க வேண்டும் என்பதை என் படத்தின் மூலம் நான் காட்டி வருகிறேன் என ஹரி கூறினார். மேலும் சின்னப் படங்கள் எடுக்கும் இயக்குனர்கள் இனிமேல் படம் எடுக்க வேண்டும் எண்ணத்தை கைவிட வேண்டும் என நீங்கள் கூறியது பெரிய சர்ச்சையானதே அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என விஷாலிடம் ஒரு நிருபர் கேட்டார்,

அதற்கு பதில் அளித்துக் கொண்டிருக்கும் போது அவரை குறுக்கிட்டு பேசிய பயில்வான் ரெங்கநாதன் ‘சின்னப் படங்கள் ஓடவில்லை என்கிறீர்கள். சமீபத்தில் ரிலீஸான மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு போன்ற படங்கள் எல்லாம் வெளியாகி வசூலில் சாதனை படைக்கத்தானே செய்தது’ என கேட்டார்.

இதையும் படிங்க: சர்கார் ஸ்டைலில் சென்னையில் எண்ட்ரி கொடுத்த விஜய்… அதுக்குனு இவ்வளோ ஸ்பீடா?

உடனே பயில்வான் ரெங்கநாதன் வாய்ஸை கேட்டதும் விஷால் அவருக்கெல்லாம் என்னால் பதில் சொல்லமுடியாது. சத்தியமா சொல்றேன். பதில் சொல்ல மாட்டேன் என்று கூறியதோடு நான் இப்போது பொதுச் செயலாளராக இருக்கிறேன். அதனால் இப்படி இருக்கும் போது என் வாயை கிளற வேண்டாம் என மிகவும் கோபத்துடன் கூறினார் விஷால்.

Continue Reading

More in Cinema News

To Top