Cinema News
பலாப்பழம் பச்சையாதான இருக்கும்.. ஏன் கருப்பா இருக்கு? அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மன்சூர்
Actor Mansoor Alikhan: வேலூர் தொகுதியில் தன்னிச்சையாக பலாப்பழம் சின்னத்திற்கு போட்டியிடுகிறார் நடிகர் மன்சூர் அலிகான். இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற பெயரில் தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்து போட்டியிடும் மன்சூர் அலிகான் கடந்த சில நாள்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சில தினங்களுக்கு முன்பு குடியாத்தம் சந்தையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது மயங்கி விழுந்தார்.
விசாரித்ததில் குடியாத்தம் பகுதியில் பிரச்சாரம் முடிந்து வீடு திரும்பும் வழியில் வலுக்கட்டாயமாக மன்சூர் அலிகானுக்கு வலுக்கட்டாயமாக பழ ஜூஸ் வழங்கப்பட்டதாம். அதை குடித்த சில நேரத்திலேயே மன்சூர் அலிகானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்திருக்கிறார். அதனால் அந்த ஜூஸில்தான் விஷம் கலந்துள்ளதாக மன்சூர் அலிகான் வாக்கு மூலம் கொடுத்தார்.
இதையும் படிங்க: அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது! வேற மாதிரி ஆயிடும்.. பயில்வானை மூக்குடைத்த விஷால்
இன்று தேர்தல் நாள் என்பதால் பல பிரபலங்கள் அவரவர் தொகுதியில் வந்து தனது ஓட்டுக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் மன்சூர் அலிகான் அவர் போட்டியிடும் வேலூர் தொகுதிக்கு வந்து தனது ஒட்டை பதிவிட வந்தார். நேராக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி ஓட்டு போடும் இடத்திற்கே வந்து இறங்கினார் மன்சூர் அலிகான்.
வரும் வழியிலேயே சுவரில் சின்னமும் கட்சியின் பெயரும் பொறிக்கப்பட்ட பேப்பர் சுவரில் ஒட்டியிருப்பதை கண்டு அவருடைய பலாப்பழம் சின்னம் மட்டும் கருப்பாக இருப்பதை பார்த்துக் கொண்டார். அதை பார்த்ததும் இப்படி கருப்பாக இருந்தால் எப்படி மக்களுக்கு தெரியும்? ஒழுங்காக வரைய வேண்டியதுதானே? என்று புலம்பிக் கொண்டே உள்ளே சென்றார்.
இதையும் படிங்க: கர்ப்பத்தினை கன்பார்ம் செய்த ராதிகா… ஷாக்கான கோபி… கலாய்த்த ராமமூர்த்தி..
உள்ளே தேர்தல் அதிகாரிகளிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். லைட் உள்ள இடத்தில் வாக்கு போடும் இயந்திரத்தை வைத்தால்தான் மக்களுக்கு தெளிவாக தெரியும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார் மன்சூர் அலிகான்.