Cinema News
விஜயோட பைக் டிரைவர்.. ஒரே பட்டன் அஜித்!.. ஒருத்தர விடாம பங்கம் பண்ணும் புளூசட்ட மாறன்..
இன்று தமிழ்நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. பொதுவாக ஓட்டு போட வரும் சினிமா பிரபலங்கள் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகும். குறிப்பாக ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோர் எப்போது ஓட்டு போட வருவார்கள் என அவர்களின் ரசிகர்களும், ஊடகங்களும் காத்திருப்பார்கள்.
விஜய் வீட்டின் முன்பே ஊடகங்கள் குவிந்திருப்பார்கள். விஜய் வெளியே வருவது முதல் ஓட்டு போட்டுவிட்டு செல்லும் வரை அவரை படம் பிடிப்பார்கள். இந்த வீடியோ ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வைரலாக பரவி வரும். சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்களுக்கும் இது மகிழ்ச்சியை கொடுக்கும்.
இதையும் படிங்க: அஜித் என்ன பெரிய ஆளா?!.. முதியவருக்கு வந்த கோபம்!.. ஓட்டு போட வந்த இடத்தில் நடந்த களேபரம்!..
இன்னும் சில ரசிகர்கள் விஜய், அஜித் ஆகியோர் எந்த பள்ளியில் ஓட்டு போட வருகிறார்கள் என தெரிந்துகொண்டு அவர்களுக்கு முன்பே அங்கு சென்று காத்திருப்பார்கள். அதோடு, அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதிலும் ஆர்வமாக இருப்பார்கள். இந்த தேர்தலில் திரையுலகில் இன்று காலை முதல் ஆளாக நடிகர் அஜித் திருவான்மியூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஓட்டு போட்டார்.
பொதுவாக அஜித் ஓட்டு போட வந்தாலே ஊடகங்கள் அவரை மிகவும் எளிமையானவர் என பில்டப் செய்வார்கள். இந்த முறையும் அது நடந்தது. அதேபோல், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் ஓட்டு போட்டர்கள். தனுஷ் தனியாக வந்தார். சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார்.
விஜய் இன்னும் வாக்களிக்க வரவில்லை. ரஷ்யாவிலிருந்து நேற்றுதான் அவர் சென்னை வந்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில், வழக்கம்போல் பிரபல தமிழ் டாக்கிஸ் யுடியூப் சேனல் புளூசட்ட மாறன் எல்லோரையும் கலாய்க்க துவங்கிவிட்டார்.
இதையும் படிங்க: சர்கார் ஸ்டைலில் சென்னையில் எண்ட்ரி கொடுத்த விஜய்… அதுக்குனு இவ்வளோ ஸ்பீடா?
எளிமையுடன் ஒரே ஒரு பட்டனை மட்டும் அழுத்தி அஜித்குமார் வாக்களித்தார். வியந்த பொதுமக்கள்’ என பதிவிட்டார். இதையடுத்து அஜித் ரசிகர்கள் அவரை திட்ட துவங்கிவிட்டனர். கமல் வாக்களித்த புகைப்படத்தை பகிர்ந்து ‘ஊழலை ஒழிக்க வருகிறார் இந்தியன் 2’ என நக்கலடித்தார்.
விஜய் இன்னும் ஓட்டு போட வரவில்லை என்பதால் ‘விஜயுடைய சைக்கிள் டிரைவர் வேலைக்கு வர லேட் என்பதால் அவர் எப்போது வாக்களிக்க வருவார் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்’ என நக்கலடித்திருக்கிறார். போன தேர்தலில் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார் என்பதைத்தான் இப்படி நக்கலடித்திருக்கிறார். ஆனால், அவர் பதிவை இட்டு ஒரு மணி நேரத்தில் விஜய் வாக்களிக்க வந்துவிட்டார்.