Connect with us
Sivaji, Sathyarraj

Cinema News

அந்த ஒரு விஷயத்தில் சிவாஜியை முந்திக்கொண்ட சத்யராஜ்… அட அவரு சொல்றது உண்மைதான்!..

கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தின் வெற்றி விழாவில் நடிகர் திலகம் சிவாஜி, கமல், சத்யராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இவர்களில் கமல், சத்யராஜ் என்ன பேசினார்கள் என்று பார்ப்போம்.

முதலில் படத்தின் தயாரிப்பாளர் கமல் இவ்வாறு பேசினார்.  பராசக்தி என்ற படத்திற்குப் பிறகு தமிழில் நடிக்க வந்த எந்த நடிகனுக்கும் சிவாஜியின் சாயல் இல்லாமல் இருக்காது. இல்லை என்று சொல்பவர்கள் பொய் சொல்பவர்கள அதை உணராதவர்கள். இல்லையேல் அப்பட்டமாக பொய் சொல்பவர்கள்.

Kamal

Kamal

இதை உணர்ந்திருக்கிறோம். பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்னைப் பார்த்து இன்னொரு வருங்கால நடிகன் நடிப்பான் என்றால் அதிலும் இவருடைய வேர் இருக்கிறது. காரணம் அவரது அங்க அசைவுகள் இன்று என்னிலும் தெரிகிறது. ரஜினி, சத்யராஜ், பாக்கியராஜிலும் தெரிகிறது.

இந்த மாபெரும் கலைஞன் இன்று எங்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டு இருப்பது தான் பொற்காலம். இன்று இவர் இருக்கும் இதே காலகட்டத்தில் நாங்களும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் நாங்களும் என்பது எங்களது பொற்காலம். பெருமையாக நினைக்கிறோம். ,t;thW mtu; Ngrp Kbj;jhu;.

இந்த விழாவில் தங்கப்பதக்கம் படத்தைப் பற்றி பேசி சத்யராஜ் கலகலப்பூட்டினார். ஏன்னா இன்ஸ்பெக்டர், போலீஸ் டிபார்ட்மெண்ட்னா சிவாஜியோட தங்கப்பதக்கம் தான் ஞாபகத்துக்கு வருது. ஆனா ஒரு விஷயத்துல நான் சிவாஜி அய்யாவை விட நான் தூள் பண்ணிட்டேன். என்னைப் பாராட்டிப் பேசுறதுக்கு சிவாஜி அய்யா இருந்த மாதிரி அவரைப் பாராட்டி பேசறதுக்கு இவ்வளவு ஒரு பெரிய நடிகன் கிடைச்சாரா… என கேள்வி கேட்டு ரசிகர்கள் மத்தியில் கைதட்டல் பெற்றார்.

இதையும் படிங்க… புரட்சித்தளபதி தளபதி ஆக வேண்டாமா? ஆசையை தூண்டி விஷாலின் அரசியலுக்கு முட்டுக்கட்டை போட்ட பிரபலம்

முன்னதாக நடிகர் திலகம் சிவாஜிகணேசன் படத்தில் ஹீரோவாக நடித்த சத்யராஜைப் பாராட்டிப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

1987ல் கமல் தயாரிக்க, சந்தானபாரதி இயக்கத்தில் வெளியான படம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு. படத்தில் சத்யராஜ், கீதா, ஜீவிதா, கேப்டன் ராஜூ உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் சூப்பர். படமும் பட்டையைக் கிளப்பியது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top