நடிகர் திலகம் சிவாஜிக்கு இணையான அந்த ரெண்டு நடிகைகள்!.. யாருன்னு தெரியுமா?..

Published on: April 19, 2024
Sivaji Ganesan
---Advertisement---

தமிழ்த்திரை உலகில் நடிகர் திலகம் சிவாஜிக்கு ஈடு, இணை என எந்த நடிகர்களும் இல்லை. ஆனால் அவர்களுக்கு இணையான 2 நடிகைகள் இருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என பார்க்கலாமா…

பராசக்தி படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகில் களம் இறங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். முதல் படத்தில் நடிப்பதற்கு முன்பு வரை பல அவமானங்களை சந்தித்தவர். ஆனால் கலைஞர் கருணாநிதியின் கதை, வசனத்தில் முதல் படத்திலேயே அழுத்தமான முத்திரையைப் பதித்துவிட்டார் சிவாஜி.

அந்தப் படத்திற்குப் பிறகு வந்த பல படங்களில் சிவாஜி தன்னெழுச்சியாக தனக்கென ஒரு தனி பாணியை வகுத்து தமிழ்ப்பட உலகில் அழுத்தமான முத்திரையைப் பதித்தார். கொடுக்கும் கேரக்டரின் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அதன் இயல்பிலிருந்து இம்மியளவும் பிசகாமல் நடித்து காண்போரை வியக்கச் செய்து விடுவார்.

Manorama, Savithiri
Manorama, Savithiri

அவரது நடிப்பைக் கண்டு மயங்காதவர்களே இருக்க முடியாது. தற்போது மட்டுமல்ல… சிவாஜிக்குப் பின்பு நடிக்க வந்த அத்தனை நடிகர்களின் நடிப்பிலும் அவரது சாயல் கொஞ்சமாவது இருக்கும். அந்த வகையில் சிவாஜியைப் பார்த்து நடிக்க வந்தவர்களே ஏராளமானோர் உள்ளனர். நடிப்புக்காக தான் எடுத்துக் கொண்ட கதாபாத்திரம் நேர்த்தியாக வர வேண்டும் என்பதற்காக எவ்வளவு நேரமானாலும் மெனக்கிடுவார்.

இவரது படங்களில் பல அழுத்தமான காட்சிகளையும் அசால்டாக நடித்து அசத்தி விடுவார். அந்த வகையில் இவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் இரண்டே இரண்டு நடிகைகள் தான் உள்ளனர். ஒன்று பொம்பள சிவாஜி என அழைக்கப்படும் ஆச்சி மனோரமா. அடுத்து நடிகையர் திலகம் என்று அழைக்கப்படும் சாவித்திரி. இவர்களும் தனக்கென தனி பாணியை வகுத்துக் கொண்டு கொடுக்கும் கேரக்டர்களாகவே மாறி நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்று ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து விடுவார்கள்.

இதையும் படிங்க… அந்த படத்தில் நான் நடிக்கவா? ஆசையாக கேட்ட சரத்குமார்… முடியவே முடியாது என மறுத்த இயக்குனர்!…

சரஸ்வதி சபதம் படத்தில் மனோரமாவின் நடிப்பும், பாசமலர் படத்தில் சாவித்திரியின் நடிப்பும் நம்மை அசர வைக்கும் ரகங்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போதும் அல்லவா…

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.