Connect with us
jaya

Cinema News

அவருக்கு ஜோடி நான்தான்! தெனாவட்டில் சுற்றிக் கொண்டிருந்த ஜெயலலிதாவை அடக்கிய எம்ஜிஆர்

MGR Jayalalitha: புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் மக்களுக்கு ஒரு நல்ல கருத்தை சொல்லும் படமாகவே வெளியாகியிருக்கின்றன. அவருடைய நோக்கமே தன்னால் சில பேர் நன்மை அடைய வேண்டுமே தவிற யாருக்கும் எந்த தீங்கும் வந்து விட கூடாது என்பதில் கவனமாக இருந்தார் எம்ஜிஆர். அதே போல் படத்தில் அமையும் பாடல்களிலும் எம்ஜிஆரின் குறுக்கீடு இருக்கத்தான் செய்யும்.

எந்த வரியிலும் கெட்ட வார்த்தைகளோ அல்லது சமூகத்திற்கு எதிரான கருத்துக்களோ இல்லாதவாறு பார்த்துக் கொள்வார் எம்ஜிஆர். மேலும் அன்றைய காலகட்டத்தில் எம்ஜிஆருடன்
அதிகமாக ஜோடி சேர்ந்து நடித்த நடிகை என்றால் அது ஜெயலலிதாதான். குறுகிய காலத்தில் அதிகமாக எம்ஜிஆருடன் மட்டும்தான் அதிக படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்.

அதற்கு அடுத்த படியாக சரோஜாதேவி அதிகமாக நடித்திருக்கிறார். காவல்காரன் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது சரோஜாதேவிதானாம். அதே போல் அடிமைப் பெண் படத்திலும் முதலில் சரோஜாதேவிதான் நடிக்க வேண்டியதுதாம். ஆனால் அந்த நேரத்தில்தான் சரோஜாதேவிக்கு திருமணம் ஆகியிருந்ததனால் ஜெயலலிதா நடித்தாராம்.

இதையும் படிங்க: யப்பா… அவரை ஆட வைக்கிறதுக்குள்ள நான் பட்ட பாடு… டான்ஸ் மாஸ்டரையே கதிகலங்க வைத்த அந்த நடிகர் யார்?

இப்படி தொடர்ந்து ஜெயலலிதாவே நடித்து வந்த நிலையில் ரிக்‌ஷாகாரன் படத்தில் ஆர்.எம்.வீரப்பன் திடீரென மஞ்சுளாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஆனால் அது ஜெயலலிதாவிற்கு பிடிக்கவில்லையாம். இருந்தாலும் எம்ஜிஆர் மஞ்சுளா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கும் போது ஜெயலலிதா அங்கு தான் இருப்பாராம். செட்டில் எல்லாரிடமும் காட்சிகள் படமாக்கினாலும் தலைவர் என்னைத்தான் ஜோடியாக போடுவார் என்று சொல்லிக் கொண்டிருந்தாராம்.

ஆனால் எம்ஜிஆருக்கும் மஞ்சுளாதான் சரியாக இருப்பார் என்று எண்ணி எதுவுமே பேசாமல்தான் இருந்தாராம். காரணம் அதுவரை எம்ஜிஆர் ஜெயலலிதா என பார்த்த ஜோடியையே பழகி போன ரசிகர்களுக்கு மஞ்சுளா ஜோடி சேர்ந்ததும் அதை ரசிக்க ஆரம்பித்தார்களாம். இதனால் கோபத்தில் ஜெயலலிதா மலேசியன் பத்திரிக்கையில் கண்டபடி பேட்டி கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: எங்க போனாலும் முட்டுக்கட்டையா? விடாமுயற்சியை தொடர்ந்து ‘குட் பேட் அக்லி’க்கும் வந்த சிக்கல்

இது தெரிந்த எம்ஜிஆர் ஜெயலலிதா ஒரு பச்சோந்தி என பதிலுக்கு பேட்டி கொடுத்தாராம். இந்த சுவாரஸ்ய செய்தியை மூத்த பத்திரிக்கையாளரான சபீதா கூறினார்.

Continue Reading

More in Cinema News

To Top