ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க!.. புளூசட்டமாறன் செஞ்ச வேலையில் கடுப்பான விஜய் ஆண்டனி..

Published on: April 20, 2024
vijay antony
---Advertisement---

இசையமைப்பாளராக இருந்து நடிகர் மற்றும் தயாரிப்பாளராக மாறியவர் விஜய் ஆண்டனி. விஜய் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களுக்கும் இவர் இசையமைத்திருக்கிறார். நான் படத்தில் மூலம் நடிகரான விஜய் ஆண்டனி அதன்பின் தொடர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அதிலும் பிச்சைக்காரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றி விஜய் ஆண்டனியின் மார்க்கெட் மதிப்பை அதிகரித்தது. இசையமைப்பாளராக மாறுவதற்கு முன் சினிமாவில் சவுண்ட் என்ஜினியராக இருந்தார். பல ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். இவர் இசையமைப்பில் வெளியான ‘நாக்க மூக்க’ பாடல் அதிரி புதிரி ஹிட் அடித்தது.

இதையும் படிங்க: ஒரு வழியா ஓடிடிக்கு வரும் மஞ்சுமெல் பாய்ஸ்!.. எந்த தளத்தில் எந்த தேதியில் வருது தெரியுமா?..

சில மாதங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. ஒருவழியாக அதிலிருந்து மீண்டார் விஜய் ஆண்டனி. சமீபத்தில் அவரின் நடிப்பில் ரோமியோ என்கிற படம் வெளியானது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்திருந்தார்.

romeo

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மிருனாளி ரவி நடித்திருந்தார். வினாயக் வைத்தியநாதன் என்பவர் இப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தின் டீசர் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தை பிரபல யுடியூப் விமர்சகர் புளூசட்டமாறன் நக்கலடித்து விமர்சனம் செய்திருந்தார். அதோடு, இந்த படம் தோல்வி என்பது போல பதிவிட்டு வந்தார்.

இதையும் படிங்க: நடிகர் திலகம் சிவாஜிக்கு இணையான அந்த ரெண்டு நடிகைகள்!.. யாருன்னு தெரியுமா?..

இதனால் கோபமடைந்த விஜய் ஆண்டனி தனது டிவிட்டரில் ‘பல நல்ல திரைப்படங்களை விமர்சித்து கொல்லும் புளூ சட்டை மாறன் போன்ற சிலருக்கும், அவர்கள் சொல்வதை உண்மை என நம்பி ரோமியோ போன்ற நல்ல படங்களை கொண்டாடாமல் தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

என் அன்பு மக்களே!. .ரோமியோ ஒரு நல்ல படம்.. போய் பாருங்க புரியும். ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிவிடாதீர்கள்’ என பதிவிட்டிருக்கிறார். இதையடுத்து ‘கண்டிப்பாக இந்த படத்தை தியேட்டர்ல போய் பார்ப்போம்’ என ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.