பல வெற்றிப்படங்களுக்கும் இசையமைத்து நான் திரைப்படம் மூலம் நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. குறுகிய காலகட்டத்திலேயே தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். நான், சலீம், பிச்சைக்காரன் 3 படங்கள் ஹிட் அடிக்கவே விஜய் ஆண்டனியின் மார்க்கெட் எகிறியது.
அதிலும் பிச்சைக்காரன் திரைப்படம் 100 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. இப்படம் தெலுங்கிலும் ஹிட் அடிக்க, அதன்பின் விஜய் ஆண்டனியின் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியானது. ஆனால், பிச்சைக்காரன் படத்திற்கு பின் வெளியான சில படங்கள் தோல்வியை சந்தித்தது.
இதையும் படிங்க: ஏழாம் அறிவு சூர்யாவின் மகனாச்சே!.. அந்த வித்தையிலும் சாதனை படைத்த தேவ்!.. அப்பா செம ஹேப்பி!..
திமிறு பிடிச்சவன், கோடியில் ஒருவன் ஆகிய படங்கள் சுமாராக போக பிச்சைக்காரன் 2 படம் சூப்பர் ஹிட் அடித்தது. கடைசியாக வெளியான ரத்தம், கொலை ஆகிய படங்கள் தோல்வியை சந்திக்க சமீபத்தில் ரோமியோ படம் வெளியானது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்திருந்தார்.
ஆனால், இந்த படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை. இந்த படம் வெற்றி கண்டிப்பாக பெறும் என எதிர்பார்த்தார் விஜய் ஆண்டனி. இந்த பட இயக்குனர் ரோமியோ என்கிற பெயரில் ஒரு குறும்படத்தை இயக்கி இருந்தார். அது பிடித்து போக அவரை அழைத்து இதை சினிமாவாக எடுக்கலாம் என திட்டமிட்டார் விஜய் ஆண்டனி. இப்படி உருவானதுதான் ரோமியோ படம்.
இதையும் படிங்க: அல்லு அர்ஜுன் மாஸ்னா!.. நான் பக்கா மாஸ்!.. ஓடிடி பிசினஸில் ஓங்கி அடிச்ச கல்கி!.. இத்தனை கோடியா?..
தனது மகள் இறந்து 3வது நாளிலேயே தென்காசி சென்று இந்த படத்தில் நடிக்கும் அளவுக்கு இப்படத்தின் கதை அவருக்கு நம்பிக்கை கொடுத்தது. எப்படியும் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் தனக்கு ரூ.20 கோடி வரை லாபத்தை கொடுக்கும் என கணக்கு போட்டிருக்கிறார். ஆனால், இரண்டை கோடி கூட வராது என்கிற நிலை. தேர்தல் நேரத்தில் வெளியானது கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

ஆனால், புளூசட்ட மாறன் போன்ற விமர்சகர்களால்தான் ரோமியோ படம் ஓடவில்லை என கோபமடைந்த விஜய் ஆண்டனி அவரை திட்டி டிவிட்டரில் பதிவு போட்டார். அதோடு, ரோமியோவை ‘அன்பே சிவம் ஆக்கீடாதீங்க’ எனவும் பொங்கி இருக்கிறார். ‘ரோமியோ படம் எப்படி அன்பே சிவம் படத்துக்கு ஈடாகும்?’ என பொங்கி வருகிறார்கள் கமல் ரசிகர்கள்.
