Connect with us
Prasanth

Cinema News

நான் டாப் ஸ்டார் இல்ல… பிரசாந்தே இப்படி இப்படி சொல்ற அளவுக்கு என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்…

17 வயதில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து ரசிகர்களின் மனதில் சாக்லெட் பாயாக வலம் வந்தார் டாப் ஸ்டார் பிரசாந்த். சிறிது இடைவெளிக்குப் பிறகு தற்போது தளபதி விஜய் உடன் கோட் படத்தில் இணைந்து நடித்துள்ளார். இதனால் மீண்டும் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் கொடுத்த ஒரு பேட்டியில் ரசிகர்கள் குறித்து இப்படி பேசியுள்ளார்.

நான் வைகாசி பொறந்தாச்சு படத்துல நடிக்க ஆரம்பிச்சேன். அப்போ இருந்து இப்போ வரைக்கும் அதே ரசிகர்கள் இருக்காங்க. எங்கே போனாலும் அந்த அன்பு குறையாம இருக்காங்க. என்னோட ரசிகர்கள் குடும்பம், குழந்தைக்குட்டின்னு வளர்ந்துட்டாங்க. இதைப் பார்க்கும்போது எனக்கே பயங்கர சந்தோஷமா இருக்கும்.

இதையும் படிங்க…சரக்கே அடிக்கக் கூடாது!.. கங்கை அமரன் முடிவெடுக்க காரணமாக இருந்த அந்த சம்பவம்!..

எந்த சூழ்நிலையா இருந்தாலும் அந்த அன்பு குறையாம வச்சிருக்காங்க. எங்கே போனாலும் எப்படி இருக்கீங்க… அண்ணே என்ன பண்றீங்க? என்ன நடக்குதுன்னு ஷேர் பண்றாங்க. அவங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகாது. கடவுளுக்குத் தான் நன்றி சொல்லணும்.

GOAT

GOAT

எங்கே போனாலும் அவங்க வீட்டுப் பையனாகவே பார்ப்பாங்க. சமீபத்துல கூட ஒரு பங்ஷனுக்குப் போயிருந்தேன். அங்க ஒரு அம்மா சொன்னாங்க. தம்பி உங்க அப்பாவை நான் தான் லவ் பண்ணினேன். இன்பேக்ட் நீ தான் எனக்குப் பையனா பொறந்துருக்கணும். அப்படின்னு சொன்னாங்க. எத்தனை பேர் என்னை மீட் பண்ணினாலும் நீ வந்து என் வீட்டுப் பையன்னு என்னைக் கட்டிப்பிடிச்சி ஆசிர்வாதம் பண்ணுவாங்க.

இதெல்லாம் பார்க்கும்போது நான் ஒரு டாப் ஸ்டாரா இல்லாம, என்னைக்கும் உங்க வீட்டுப் பிள்ளை தான். அது என்னைக்கும் மாறாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க…கடைசி 10 படங்கள்.. வசூல் சக்கரவர்த்தி யார்?!.. சூப்பர்ஸ்டாரா?.. தளபதியா?!. வாங்க பார்ப்போம்!..

ஒரு நடிகனா இருக்கும்போது உங்களை ரசிகர்கள் அப்படி கொண்டாடுவாங்க. அதனால அந்த நடிகன் நடிப்பை நிறுத்த முடியாது. அது சாதாரண விஷயமல்ல. ஆனா நான் நடிக்க வந்ததும் அப்பா பீட்ல இருக்கும்போதே நடிப்பை நிறுத்திட்டாரு. அதுக்கு நிறைய பேர் சொல்வாங்க. பையன் நடிக்கும் போது அப்பாவும் நடிக்கலாமேன்னு. ஆனா ஒரு வீட்டுல ஒரு நடிகன் தான் இருக்கணும்னு சொல்வாராம் பிரசாந்தின் தந்தை தியாகராஜன்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top