விஜயை காப்பி அடிக்கிறீங்களா? சைக்கிளில் வந்த ரகசியத்தை பகிர்ந்த விஷால்.. நிலைமை மோசமா இருக்கு போல

Published on: April 22, 2024
vishal
---Advertisement---

Actor Vishal: தமிழ் சினிமாவில் புரட்சித்தளபதியாக மக்கள் மத்தியில் ஒரு நிலையான இடத்தை பிடித்தவர் நடிகர் விஷால். அடிப்படையில் விஜய் ரசிகரான விஷால் சமீபத்தில் தனது வாக்கை பதிவு செய்ய சைக்கிளில் வந்தார். அதை பார்த்த விஜய் ரசிகர்கள் மற்றும் பிற ரசிகர்கள் விஷாலை சகட்டுமானக்கி கலாய்த்து தள்ளினர். இது குறித்து இப்போது ஒரு ரசிகர் விஷாலிடம் கேள்வி எழுப்பிய சம்பவம் தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தற்போது விஷால் ‘ரத்னம்’ படத்தின் ப்ரோமோஷனுக்காக ரசிகர்களை பல ஊர்களுக்கு சென்று சந்தித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகிய படம் ரத்னம். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். தற்போது சேலம் ஒரு கல்லூரியில் படத்தை பற்றி ப்ரோமோஷன் செய்து கொண்டிருந்தார் விஷால்.

இதையும் படிங்க: 75 லட்சத்திலிருந்து 5 லட்சமாக சம்பளத்தை குறைத்த பிரபு.. சிவாஜி சும்மா இருப்பாரா? பதறி ஓடிய சம்பவம்

அப்போது ஒரு கல்லூரி மாணவர் ‘உங்களை பொறுத்தவரைக்கும் உங்களுக்கு இன்ஸ்பிரேஷனே விஜய்தான் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஒரு இயக்குனராக வேண்டுமென்றால் விஜயை வைத்துதான் படம் எடுப்பேன் என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படி இருக்கும் போது சமீபத்தில் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டீர்கள். இதுவும் விஜயின் இன்ஸ்பிரேஷன்தானா?’ என கேட்டார்.

அதற்கு பதிலளித்த விஷால் விஜய் எனக்கு சீனியர். அவர் சந்தித்த விமர்சனங்களை நான் ஆரம்பத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். அப்படி இருந்தும் விஜய் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு இப்போது உங்கள் முன் தளபதியாக நிற்கிறார் என்றால் அதற்கு காரணம் அவரது தன்னம்பிக்கை. அப்படி இருக்கும் போது அவர் உங்களுக்கு மட்டுமில்லை . எனக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் தான்.

இதையும் படிங்க: கலங்கி நின்ன இயக்குனர்!.. கை கொடுத்த கமல்!.. அவர் இல்லன்னா ரஜினிக்கு ஒரு கிளாசிக் படமே இல்ல!..

ஆனால் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டதற்கு விஜயால் தான் என்று இல்லை. சத்தியமா என்னிடம் வேறு வண்டி இல்லை, என் அப்பா மற்றும் அம்மாவிற்கு ஒரு வண்டி இருக்கிறது. நான் எல்லாவற்றையும் விற்று விட்டேன். புதுசா வண்டி வாங்குவதற்கும் காசு இல்லை. ரத்னம் படப்படிப்பு சமயத்திலும் காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு எல்லாரும் வண்டியில் சென்று விட்டார்கள். ஆனால் நான் மட்டும் ஒரு சைக்கிளில் இளையராஜா பாட்டு கேட்டு சைக்கிளில்தான் சென்றேன் என்று கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.