போஸ்டர்லயும் காணோம்.. ப்ரோமோஷன்லயும் காணோம்! நடிகையை காக்க வைத்து ஏமாற்றிய ஹரி

Published on: April 22, 2024
priya
---Advertisement---

Director Hari: தமிழ் சினிமாவில் ஒரு படத்தை எந்தளவுக்கு வேகமாகவும் விறுவிறுப்பாகவும் எடுக்கவேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக இருப்பவர் இயக்குனர் ஹரி. தமிழ் படத்தின் மூலம் அறிமுகமான ஹரி தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். தூள், தாமிரபரணி, சாமி, சிங்கம் , பூஜை போன்ற ஆக்‌ஷன் நிறைந்த வெற்றிப்படங்களை கொடுத்த ஹரி தற்போது விஷாலை வைத்து ரத்னம் என்ற படத்தை எடுத்திருக்கிறார்.

ஏற்கனவே விஷாலுடன் தாமிரபரணி மற்றும் பூஜை படங்களை கொடுத்த ஹரி ரத்னம் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார். அதனால் இந்த முறையும் ரத்னம் திரைப்படம் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும் என்று ரசிகர்கள் மத்தியில் பேசி வருகிறார்கள். கதையையும் தாண்டி ஹரியின் திரைப்படம் போரடிக்காத வகையில் விறுவிறுப்பாக போகும் என்பதால் எப்பவுமே அவர் படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கும்.

இதையும் படிங்க: தலைவர் 171 பட டைட்டில் இதுதான்!.. வெளியான வீடியோ!. இது நம்ம சரத்குமார் பட டைட்டில் இல்ல!…

ரத்னம் திரைப்படம் வரும் 26 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதனால் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு இருந்து வருகிறது. விஷாலின் நடிப்பில் கடைசியாக மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதனால் விஷால் ரசிகர்கள் இந்தப் படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களில் ஹரி, விஷால் மற்றும் படக்குழுவினர் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட படத்தின் ஹீரோயின் மட்டும் எங்குமே தலைகாட்ட வில்லை. அதுமட்டுமில்லாமல் படத்தின் போஸ்டரிலும் பெரிதாக காணப்படவில்லை. விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். ஹீரோயின் எங்கே? என்று பத்திரிக்கையாளர் கேட்கையில் ஹரி ‘அவர் வெளியூர் படப்பிடிப்பில் இருப்பதாக சொன்னார்.’

இதையும் படிங்க: விஜயை காப்பி அடிக்கிறீங்களா? சைக்கிளில் வந்த ரகசியத்தை பகிர்ந்த விஷால்.. நிலைமை மோசமா இருக்கு போல

ஆனால் உண்மையிலேயே பிரியா பவானி சங்கரிடம் ப்ரோமோஷனுக்கு இரண்டு வாரம் கால்ஷீட் வாங்கியிருந்தாராம் ஹரி. அதற்கு சம்மதித்து பிரியா பவானி சங்கரும் வேறெந்த படத்திற்கும் கால்ஷீட் கொடுக்காமல் காத்துக் கொண்டிருந்தாராம். ஆனால் ஹரியிடம் இருந்து பிரியா பவானி சங்கருக்கு அழைப்பே வரவில்லையாம். ஆனால் அவர் வெளியூர் படப்பிடிப்பிற்கு சென்று விட்டார் என கூசாமல் பொய் சொல்லியிருக்கிறார் ஹரி. ஒருவேளை இயக்குனருக்கும் நடிகைக்கும் எதாவது பிரச்சினை இருக்குமோ என கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.