தலைவர்171 புரோமோ டயலாக்கை லோகேஷ் எங்கிருந்து சுட்டிருக்கார் பாருங்க… திருப்பதிக்கே லட்டா?

Published on: April 22, 2024
---Advertisement---

Thalaivar171: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் 171வது படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதன் புரோமோ டயலாக்கை லோகேஷ் சுட்டு இருப்பது குறித்த வீடியோ வைரலாகி இருக்கிறது.

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் பிஸியாக நடித்து வருகிறார். வேட்டையன் படத்தினை முடித்துவிட்டு ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் பணிகள் ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது.

இதையும் படிங்க: தலைவர் 171 பட டைட்டில் இதுதான்!.. வெளியான வீடியோ!. இது நம்ம சரத்குமார் பட டைட்டில் இல்ல!…

ரன்வீர் முதல் ஷாருக்கான் வரை நடிப்பதாக தகவல்களும் கசிந்துவிட்டது. இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பு செய்ய இருக்கிறார். ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தில் அனிருத்தின் இசைக்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூலி எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் வசனம் பேசிக்கொண்டே ரஜினிகாந்த் ரவுடிகளை தாக்குவார். அதில், மதுவுண்டு, மாதுண்டு, மனமுண்டு என்றாலே, சொர்க்கத்தில் இடமுண்டு. போடா எனப் பேசுவார். இந்த டயலாக்கை ரஜினியின் எவர்க்ரீன் மூவியில் இருந்து தான் லோகேஷ் ஆட்டைய போட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: விஜயை காப்பி அடிக்கிறீங்களா? சைக்கிளில் வந்த ரகசியத்தை பகிர்ந்த விஷால்.. நிலைமை மோசமா இருக்கு போல

இந்த டயலாக் ரங்கா படத்தில் ரஜினி பேசிய வசனம் எனக் கூறப்படுகிறது. அதற்குரிய படத்தின் வீடியோவும் ரசிகர்கள் இணையத்தில் உலாவ விட்டு வருகின்றனர். பொதுவாக எவர்க்ரீன் பாடல்களை மீண்டும் ஹிட் செய்வதில் கில்லாடியான லோகேஷ் இந்த முறை வசனத்தினை கையில் எடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரஜினியின் பழைய வீடியோவைக் காண: https://twitter.com/GuruSyre/status/1782388387087106061

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.