முதல் படத்திலே நயன் அப்படி… நான்லாம் பதறிட்டேன்… ஓபனாக சொன்ன இயக்குனர் ஹரி!

Published on: April 22, 2024
---Advertisement---

Nayanthara: நடிகை நயன்தாரா இப்போது இல்ல தன்னுடைய முதல் படத்திலேயே காட்டிய கெத்து மற்றும் கோபம் குறித்து இயக்குனர் ஹரி தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன். ஆனால் அவரின் திருமணத்துக்கு பின்னர் பெரிய அளவு ஹிட் கிடைக்காமல் போனதால் தற்போது அவரின் மார்க்கெட் பெரிய அளவில் சரிந்துள்ளது. அவர் நடிப்பில் வெளியான 12 படங்களும் பெரிய நஷ்டத்தினையே சந்தித்தது.

இதையும் படிங்க: தலைவர் 171 பட டைட்டில் இதுதான்!.. வெளியான வீடியோ!. இது நம்ம சரத்குமார் பட டைட்டில் இல்ல!…

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் நடிக்க வந்தவர் நயன்தாரா. அவர் முதல் படத்தில் எப்படி இருந்தார் என்று இயக்குனர் ஹரி தன்னுடைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அப்பேட்டியில் இருந்து, ஐயா படத்தில் நாயகியை தேடிய போது புது முகமாக இருக்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன்.

அப்பொழுதுதான் மலையாளத்தில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்த நயனின் புகைப்படம் எனக்கு கிடைத்தது. பின்னர் அவரை நேரில் போய் சந்தித்தோம். முதல் சந்திப்பிலேயே ஐயா படத்தின் நாயகி இவர்தான் என்பதை முடிவு செய்துவிட்டேன். முதல் படத்திலேயே ரொம்ப தைரியமான வருடத்தை ஏற்று நடித்திருப்பார். அவரிடம் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது.

இதையும் படிங்க: விஜயை காப்பி அடிக்கிறீங்களா? சைக்கிளில் வந்த ரகசியத்தை பகிர்ந்த விஷால்.. நிலைமை மோசமா இருக்கு போல

அவர் நிச்சயம் பெரிய இடத்திற்கு வருவார் என நினைத்தேன். ஆனால் இவ்வளவு பெரிய நடிகையாக வருவார் என யோசிக்கவே இல்லை. அதுபோல நயனிடம் இன்னொரு இருக்கும் பெரிய மைனஸ் அவரின் கோபம்தான். அதுவும் முதல் படத்திலே வேலை சம்மந்தப்பட்ட விஷயங்களில் தொடர்ந்து கோபப்படுவார். ஆனால் அனைத்துமே வேலை சம்மந்தப்பட்டதாகவே இருக்கும். 

காஸ்டியூம் சரியில்லை. அதில் பிரச்சினை என தொடர்ந்து அவரிடம் இருந்து புகார் வந்து கொண்டே இருக்கும். முதல் படத்திலேயே இவ்வளவு  கராராக இருக்கிறார் என நினைத்து கொள்வேன். நான் சென்று பின்னர் அந்த பிரச்னையை பேசி சமாதானம் செய்து வைத்தேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.