‘கூலி’ படப்பிடிப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய விபத்து! நூலிழையில் உயிர் தப்பிய சூப்பர் ஸ்டார்

Published on: April 23, 2024
coolie
---Advertisement---

Rajini Coolie: நேற்று லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கூலி திரைப்படத்தின் டீஸர் டைட்டிலுடன் வெளியானது. டீஸர் வெளியானதில் இருந்தே ரஜினியையும் லோகேஷ் கனகராஜையும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விட்டனர். இந்த வயதிலேயும் ரஜினியின் மாஸ் இன்னும் குறைந்த பாடில்லை என்று புகழ்ந்து வருகின்றனர். வழக்கம்போல ஒரு படத்தின் டீஸர் வெளியானதும் ரசிகர்கள் டிகோடிங் பண்ண ஆரம்பித்து விடுவார்கள்.

அதே போல் ரஜினியின் கூலி படத்தின் டீஸரையும் ஆராய ஆரம்பித்து விட்டார்கள். மேலும் இந்த படத்தில் எல்.சி.யூ இல்லை என்பது திட்டவட்டமாக தெரிந்து விட்டது. ஆனால் முழுவதும் ரஜினியின் முந்தைய படங்களின் ரெஃபரன்ஸ்களாகத்தான் இருக்கப் போகிறது. அதனால் இந்தப் படத்தில் புதிய முறையை லோகேஷ் கையாளுவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க: எப்படி வேணா பார்த்துக்கோ!.. இஷ்டத்துக்கு காட்டி ஏங்க வைக்கும் பியார் பிரேமா காதல் ஹீரோயின்!..

மேலும் கமலுக்கு எப்படி தோல்விப்படமான விக்ரம் படத்தை மீண்டும் அதே பெயரில் கொடுத்து ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக்கினாரோ அதே போல் ரஜினிக்கும் கூலி என்ற தோல்விப்படத்தின் டைட்டிலை கொடுத்து வெற்றியடைய வைக்க காத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஹிந்தியில் கூலி என்ற பெயரில் அமிதாப் பச்சன் ஒரு படத்தில் நடித்தார்.

amitab
amitab

அந்தப் படம் பெரிய அளவி வெற்றிப்பெற்ற படமாக அமைந்தது. அந்தப் படத்தின் போது அமிதாப் பச்சன் ஒரு மிகப்பெரிய விபத்தில் சிக்கினாராம். சண்டைக் காட்சியின் போது அமிதாப் பச்சனும் சண்டை மாஸ்டரும் பயிற்சியி ஈடுபட்டிருந்தார்களாம். அப்போது அந்த சண்டை பயிற்சியாளர் அமிதாப்பை தள்ளி விட தூரத்தில் இருக்கும் ஒரு சேரில் போய் அமிதாப் விழ வேண்டும்.

இதையும் படிங்க: ஒரே ரஜினி.. ஒரே சூப்பர் ஸ்டார்! ‘கூலி’ படத்தின் டைட்டிலில் இத்தனை விஷயம் இருக்கா?

அதே போல் அமிதாப் போய் விழ தவறுதலாக அந்த சேரில் ஏதோ கம்பி நீட்டிக் கொண்டிருக்க அது அமிதாப்பின் விழாவில் போய் குத்திவிட்டதாம். கர்நாடகாவில் படப்பிடிப்பு என்பதால் தீவிர சிகிச்சைக்காக சிவராஜ்குமார் உதவியுடன் அமிதாப் மும்பைக்கு கொண்டு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாராம். இந்த சம்பவம் அந்த நேரத்தில் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.