Cinema News
என்னது கெட்டப் பைத்தியமா?.. கலாய்க்கும் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுப்பாரா தங்கலான்?..
விக்ரம் பல தோல்விகளைக் கடந்து தன்னை ஒரு முன்னணி ஹீரோவாக மாற்றிக் கொண்டார். ஆனால் இன்றைய நிலைமையில் விக்ரமுக்குப் பிறகு வந்த பல ஹீரோக்கள் அவரையும் தாண்டி முன்னுக்குப் போய்க்கிட்டு இருக்காங்க.
ஆரம்ப காலகட்டத்தில் தொடர்ந்து தோல்வியைக் கொடுத்த விக்ரமுக்கு திருப்புமுனையாக அமைந்தது சேது படம் தான். பாலாவின் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட கெட்டப், நடிப்பு என அசத்தினார். பல விருதுகளையும் அள்ளினார். 2001ல் தரணி இயக்கத்தில் வெளியான தில் படத்தில் இருந்து தான் இவர் கமர்ஷியல் ஹீரோவானார். அதன்பிறகு ஜெமினி படம் அவரது மார்க்கெட்டை உயர்த்தியது.
2003ல் தரணி இயக்கத்தில் விக்ரம் நடித்த தூள் அவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்தது. இது இன்டஸ்ட்ரியல் ஹிட். 187 நாள்கள் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் இருந்து தான் தமிழ்சினிமாவின் முன்னணி ஹீரோவானார்.
அதே ஆண்டில் ஹரியின் இயக்கத்தில் விக்ரம் நடித்த சூப்பர்ஹிட் படம் சாமி. திரிஷா ஜோடி. பாட்டு, பைட், ஆக்ஷன் காட்சிகள் எல்லாமே செம மாஸ். அதன்பிறகு 2005ல்; ஷங்கர் இயக்கத்தில் நடித்த அந்நியன் படம் பட்டையைக் கிளப்பியது. அந்நியன் படத்திற்குப் பிறகு விக்ரமின் பெரும்பாலான படங்கள் தோல்வியைத் தான் தழுவின. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் தெய்வத்திருமகள், ஐ என்ற இரு படங்கள் மட்டும் தான் தேறின.
இந்தத் தோல்விக்கு என்ன காரணம் என்று பார்ப்போம். ஒருவர் தன்னை நல்ல நடிகர் என்று நிலை நிறுத்துவதே பெரிய விஷயம். அதை விட ரொம்ப கஷடம் மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக மாறுவது. விக்ரமைப் பொறுத்தவரை இந்த இரு விஷயங்களுமே நடந்தன. சேது, காசி, பிதாமகன் படங்களில் இவர் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதில் இருந்தே இவர் ஒரு நல்ல நடிகர் என்பதை நிரூபித்து விட்டார்.
அதே போல மாஸ் ஆக்ஷன் ஹீரோ என்றால் தில், தூள், ஜெமினி, சாமி ஆகிய படங்களைச் சொல்லலாம். இது தான் இவருக்குக் குழப்பத்தையும் தந்துள்ளது. அந்நியன் படத்திற்குப் பிறகு தன்னை நல்ல நடிகராக காட்ட வேண்டுமா? மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக முன்னிலைப்படுத்துவதா என்ற குழப்பம் வந்துவிட்டதாம். அதனாலேயே அவரது கதைத் தேர்வுகளிலும் கவனம் செலுத்தத் தவறி விட்டார். அதனால் தான் மஜா, பீமா, கந்தசாமி, ராஜபாட்டை ஆகிய படங்கள் அவருக்குக் கைகொடுக்கவில்லை.
தன்னை ஒரு மாஸ் ஆக்ஷன் ஹீரோவாகவே முன்னிலைப்படுத்தி நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் மட்டும் விக்ரம் நடித்து இருந்தால் இன்று அவரது லெவலே வேற தான். விஜய், அஜீத் ரேஞ்சுக்குப் போய் இருப்பார். கடைசியாக நடித்த கோபுரா படத்தைப் பார்த்து நெட்டிசன்கள் விக்ரம் ஒரு கெட்டப் பைத்தியம் என்றே சொல்லிவிட்டார்களாம். விக்ரம் கிட்ட ஒரு படத்தை ஓகே பண்ணனும்னா கதை கூட அவருக்கு முக்கியம் கிடையாது. இத்தனை கெட்டப் இருக்குன்னு சொன்னா போதும். உடனே ஓகே பண்ணிடுவார் என்று செமயாகக் கலாய்த்து இருந்தார்களாம்.
இதையும் படிங்க… என்ன பழக்கம்ணே!.. சாப்பிடுற இடத்துல எதுக்கு சினிமா?.. இளைஞர்களுக்கு அட்வைஸ் பண்ண பகத் ஃபாசில்!..
விக்ரம் படத்துல நிறைய கெட்டப் இருப்பதாக பில்டப்கள் வரும். ஆனால் படத்தைப் போய் பார்த்தால் படத்துக்கும் கெட்டப்புக்கும் சம்பந்தமே இருக்காதாம். கதைக்காகத் தான் கெட்டப்பே தவிர கெட்டப்புக்காக கதை எழுதுவது சிரமம். இந்த நிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்து வரும் படம் . ரசிகர்களும் இந்தப் படத்தைத் தான் ரொம்பவே எதிர்பார்த்து வருகிறார்கள். இது அவருக்கு கம்பேக் கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.