அஜித் இல்லைனா நீங்க இல்ல! அருண்விஜயை டென்ஷனாக்கிய நிருபர்.. என்ன பதில் சொன்னார் தெரியுமா?

Published on: April 24, 2024
arun
---Advertisement---

Actor ArunVijay: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அருண் விஜய் ஆரம்ப காலங்களில் இவருடைய படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. கிடைக்கிற கதாபாத்திரங்களில் நடித்து வந்த அருண் விஜய் சமீப காலமாக ஒரு மாஸ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் ஜொலித்துக் கொண்டு வருகிறார். அதுவும் அவருடைய செகண்ட் இன்னிங்ஸ் பெரிதளவு பேசப்பட்டது.

அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த அருண் விஜயை அனைவரும் விக்டராக கொண்டாடி தீர்த்தனர். அந்தப் படத்தில் விக்டர் கதாபாத்திரத்தில் மாசாக என்ட்ரி கொடுத்திருந்தார் அருண் விஜய்.அதிலிருந்தே அவருடைய மார்க்கெட் உயர்ந்து விட்டது.

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு தொடர்ந்து ஹீரோவாக பல நல்ல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருந்தார் அவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த நிலையில் அடுத்ததாக ரெட்ட தல என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் அந்தப் படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் அருண் விஜய்.

சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் பேட்டியில் நிருபர் ஒருவர் நீங்கள் மிகவும் பின்தங்கி இருந்த காலத்தில் அஜித் படம் தான் உங்களுக்கு கை கொடுத்தது. அஜித் படத்தில் நடித்ததன் மூலம் அவருடைய ரசிகர்களை நீங்கள் ஆக்கிரமித்து விட்டீர்கள். அதனாலயே இந்த படத்திற்கு ரெட்ட தல என்று பெயர் வைக்க திட்டமிட்டீர்களா? ஒருவேளை இப்படி ஒரு டைட்டில் வைத்தால் இன்னும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடலாம் என்ற காரணத்தினால் இந்த ஒரு டைட்டிலுக்கு சம்மதம் தெரிவித்தீர்களா என்று கேட்டார்.

இதற்கு பதில் அளித்த அருண் விஜய் தல என்ற ஒரு பெயர் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் பிரபலமாகிவிட்டது. அஜித்துடன் நடித்ததன் மூலம் அஜித் ரசிகர்களும் என்னை விரும்ப ஆரம்பித்து விட்டார்கள். அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற ரசிகர்களும் என்னை ஏற்றுக் கொண்டார்கள். அதனாலயே இப்பொழுது நான் அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற காரணத்தினாலேயே நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். என்னுடைய திறமை என்ன என்பதை நிரூபிக்க காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.