அரைவேக்காடு அரசியல்வாதி விஜய்! வலைப்பேச்சு பிஸ்மியின் கருத்துக்கு சரியான பதிலடி கொடுத்த தளபதி

Published on: April 24, 2024
nismi
---Advertisement---

Actor Vijay: இன்று விஜயின் அரசியல் வருகைதான் பெரும் பேசு பொருளாக இருக்கிறது. கோடிகளில் சம்பளம், பீக்கில் இருக்கும் நடிகர் இப்படி ஒரு அந்தஸ்தை அசால்ட்டாக உதறி தள்ளிவிட்டு அரசியலுக்குள் வரும் விஜயை பலரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர். இந்த நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி அவருடைய கருத்தை யுடியூப் சேனலில் பதிவிட்டிருக்கிறார். விஜய்க்கும் பிஸ்மிக்கும் இடையே நல்ல ஒரு நெருக்கம் எப்போதுமே இருக்குமாம்.

அந்த காலத்தில் வெளியான படங்களை ரீ ரிலீஸ் செய்து லாபம் பார்க்கும் திரையரங்குகள் இப்போது விஜயால் கோடிகளில் புரண்டு வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான கில்லி படத்தை ரீ ரிலீஸ் செய்து மக்கள் விஜயை கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே அரசியலில் தீவிரம் காட்டும் விஜய் இப்போது கில்லி படத்தின் ரீ ரிலீஸ் வெற்றியால் மேலும் மக்கள் நெஞ்சத்தில் ஒரு ஆழமான இடத்தை பெற்று விட்டார்.

இதையும் படிங்க: சிவாஜி எடுத்த முடிவுக்கு பின்னால் இருக்கும் காரணம் இதுதான்!.. ஒய்.ஜி.மகேந்திரன் சொன்ன சூப்பர் தகவல்..

அதனால் விஜயை ஒரு நல்ல நடிகராகத்தான் நான் பார்க்க விரும்புகிறேன். நடிகர்களுக்கு நாடாளும் தகுதி இல்லை என்ற கொள்கையில் உறுதியாக இருப்பவன். அதனால் விஜய் அரசியலுக்கு வருவதை கடுமையாக எதிர்க்கிறேன். ஒரு சமயம் விஜயை அரவைக்காடு அரசியல் வாதி என்று விமர்சனம் செய்தேன். இது ஒரு கடுமையான சொல் என்று எனக்கு தெரியும். அவருடைய ரசிகர்களும் என்னை பதிலுக்கு கடுமையாக விமர்சித்தார்கள்.

ஏற்கனவே விஜய்க்கும் எனக்கும் நல்ல நட்பு இருக்கிறது. நான் விமர்சிப்பதை அவர் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டுதான் வருகிறார். ஒரு சமயம் விஜயுடன் போனில் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது விஜய் ‘சார் நான் வலைப்பேச்சை தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன். அதற்காக என்னை பாராட்ட வேண்டும் என்று சொல்லவில்லை. என்னை கடுமையாக விமர்சிக்கிறீர்கள். என்னை கழுவி கழுவி ஊற்றினாலும் பரவாயில்லை. நான் அதற்காக வருத்தப்படவில்லை’ என்று சிரித்தபடியே சொன்னாராம்.

இதையும் படிங்க: ரஜினிக்கு 100 படி மேல் விஜய்! அவர நம்பி ஏமாந்துதான் மிச்சம்.. கொதிப்பில் இயக்குனர்

இதை குறிப்பிட்டு பேசிய பிஸ்மி நான் விஜயை பலமுறை கடுமையாக விமர்சித்து பேசினாலும் விஜய்க்கு என் மீது தனிப்பட்ட கோபமோ வருத்தமோ இல்லை என்பதை இந்த செய்தியின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என வலைப்பேச்சு பிஸ்மி கூறினார்.

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.