
Cinema News
கமலை பார்த்து டென்ஷன் ஆன விஜயகாந்த்… எதுக்குன்னு தெரியுமா? அந்த குணா என்ன சொல்றார்னு பாருங்க…
Published on
கமலைப் பார்த்து கேப்டன் விஜயகாந்த் டென்ஷன் ஆனார். அது ஏன் எதற்கு என்று பார்ப்போம். அதற்கு முன்பாக கமலின் குணா படத்தில் அந்த குணா என்ற பெயர் எப்படி உருவானது என்றால் அது அவரது ரசிகர் மன்ற நிர்வாகியின் பெயராம். குணசீலன் என்ற அந்தப் பெயரின் சுருக்கமே குணா. கமலிடம் 18 ஆண்டுகள் ரசிகர்மன்ற நிர்வாக வேலை பார்த்து வந்த குணசீலன் கமல் உடனான தனது அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க… அரைவேக்காடு அரசியல்வாதி விஜய்! வலைப்பேச்சு பிஸ்மியின் கருத்துக்கு சரியான பதிலடி கொடுத்த தளபதி
நான் கல்லூரி படிக்கிற காலகட்டத்தில் பேச்சுப்போட்டிக்குப் போறது வழக்கம். 10 பேர் கொண்ட குழு நாங்கள். எங்கு பேச்சுப்போட்டி நடந்தாலும் நாங்க தான் போவோம். அப்போது மய்யம் என்ற பத்திரிகை சார்பாக பேச்சுப்போட்டி நடக்கிறது. எங்க கூட்டத்துல கமல் சார்னா பிடிக்காது. எங்களுடையது கருப்பு சிந்தனைகள். இவரு சிவப்பு. அதனால பிடிக்காது. போகணுமா வேணாமான்னு முடிவு பண்றோம். அப்புறம் கலந்துக்கிட்டோம். இயக்குனர் ராசி அழகப்பன் நடத்துறாரு. நாங்க முதல் 3 பரிசை வாங்குறோம். ஆனா பரிசு 3 மாசமாகியும் எங்களுக்குக் கிடைக்கல.
உடனே மய்யம் ஆபீஸைத் தேடிக் கண்டுபிடிச்சு போறோம். 1000ரூபா வாங்கி என்னப்பா பண்ணப்போற… உள்ளே வாங்கய்யா அதையும் தாண்டி நிறைய விஷயம் இருக்குய்யான்னு சொன்னாரு. பேசிக்கா ஒரு விஷயம் எனக்கு கமல் சாரைப் பிடிக்காது. ஒரு நடிகனை துதி பாடி எழுதறது பிடிக்காது. வைரமுத்து, பாரதிதான், சுரதாவை எல்லாம் எழுதுனேன். ஆனா கமலைப் பற்றி எதுவுமே எழுதவில்லை. இந்த நிலையில் தான் கமல் என்னை சந்திக்க விரும்பினார். அவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்த சமயத்தில் சந்தித்தேன்.
Kamal, Guna
ரசிகர்களின் ஆற்றலை நல்ல விதத்திற்குப் பயன்படுத்த விரும்பினார். அதற்காக ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றினோம். மாணவர்களுக்காக ஒரு அமைப்பு தொடங்கி அங்கு கமலைப் பேச வைத்தேன். அவர்களுக்காக முதல் முறையாக 10 ஆயிரம் ரூபாய் பரிசு என பேச்சுப்போட்டி நடத்தினார். மாணவர்களிடம் இருந்து கவிதைகளை வாங்கி அடையாளம் என்று புத்தகம் போட்டோம். கடைசியில் எங்களின் அடையாளமாக கமல் மாறிவிட்டார். 1990ல இருந்து 2008 வரை அவரு கூட பயணித்தேன்.
அப்போ கமல் பிறந்தநாளன்று அதாவது நவம்பர் 7ல் யாரெல்லாம் கஷ்டப்படுறாங்களோ அவங்களுக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் கொடுப்பார். அப்ப எங்களப் பார்த்து நிறைய பேரு டென்சன் ஆவாங்க. விஜயகாந்த் சார்லாம் ‘என்னய்யா பண்றீங்க.. நாங்க எல்லாம் ஏதோ ஒண்ணு பண்றோம். நீங்க ஒரு மூலைல இருந்து என்னென்னமோ பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு?’ கேட்டாரு. எங்களுக்கு அரசியல் எல்லாம் தெரியாது. ஏதாவது ஒண்ணு செய்யணும்கறதுக்காக செஞ்ச விஷயம் அது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்ச்சை நாயகன் பாலா : kpy பாலா மீது பல சர்ச்சைகள் அவரை சுற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பாலா...
Ajith Vijay: தமிழ் சினிமாவில் எப்படி எம்ஜிஆர் – சிவாஜிக்கு பிறகு ரஜினியும் கமலும் பல சாதனைகள், வெற்றிகளை குவித்து வந்தார்களோ...
சிம்புவுடன் இணைந்த வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் முக்கிய, அதே சமயம் சிறந்த இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். இத்தனைக்கும்...
வடிவேலுவின் கோபம் : தற்போது சமூக வலைதளங்களில் வைகைப்புயல் வடிவேலுதான் பேசும் பொருளாக மாறி உள்ளார். அதற்கு காரணம் சமீபத்தில் அவர்...
தனுஷை வைத்து பல படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில்...