Cinema News
பண்டிகை நாளில் களமிறங்கும் டாப் 5 பேன் இண்டியா திரைப்படங்கள்!.. வெறித்தனமா வரும் வேட்டையன்!..
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என எந்த மொழியாக இருந்தாலும் சரி, பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் பண்டிகை தினத்தை குறிவைத்தே எல்லா வேலையும் நடக்கும். அதற்கு காரணம் விழா மூடில் ரசிகர்கள் திரண்டு தியேட்டருக்கு வருவார்கள், 3 அல்லது 4 நாட்கள் தொடர் விடுமுறை இருக்கும் என்பதால் வசூலையும் அள்ளிவிடலாம் என்பதுதான் அந்த கணக்கு.
60களில் தமிழ் சினிமவில் கொடி கட்டி பறந்த எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியின் பல முக்கிய படங்கள் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையில்தான் வெளியானது. அதேபோல்தான் ரஜினி, கமல், விஜயகாந்த் படங்களும் பண்டிகை நாளில் வெளியானது. தீபாவளி, பொங்கலை தவிர்த்துவிட்டால் தமிழ் புத்தாண்டு, வினாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை போன்ற நாட்களிலும் பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாகும். அப்படி இந்த வருடம் வெளியாகும் சில முக்கிய படங்களை இங்கு பார்ப்போம்.
இதையும் படிங்க: விஜய் தூக்கத்தை கெடுக்க முடிவு கட்டிய ரஜினிகாந்த்?.. 300 கோடி, 1100 கோடின்னு எகிறுதே!..
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் கல்கி படம் மே 9ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நாளில் எந்த முக்கிய பண்டிகையும் இல்லை என்றாலும் தியேட்டரில் கூட்டம் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 திரைப்படம் ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று வெளியாகவுள்ளது. இந்த 2 படங்களுமே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
புஷ்பா முதல் பாகம் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் புஷ்பா 2 அதிக பொருட்செலவில் உருவாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வினாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவிருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இப்படம் வெளியாகவிருக்கிறது.
அடுத்து ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேவாரா’ ஆயுத பூஜையான அக்டோபர் 10ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தில் தயாரிப்பாளர் போனிகபூரின் மகள் ஜான்வி கபூர் நடித்திருக்கிறார். இந்த படமும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினியின் வேட்டையன் திரைப்படமும் வருகிற அக்டோபர் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகவுள்ளது. ஆனால், ரிலீஸ் தேதியை இன்னும் லைக்கா நிறுவனம் அறிவிக்கவில்லை. விழா அன்று ரஜினி படம் வருகிறது என சொல்வதை விட ரஜினி படம் வெளிவரும் நாள் அவரின் ரசிகர்களுக்கு விழா நாள் என்றுதால் சொல்ல வேண்டும்.