Cinema News
கில்லி ஹிட்டை தொடர்ந்து அந்த படமும் ரி-ரிலீஸ் ஆகுதான்!.. விஜய் பேன்ஸ்க்கு செம திருவிழாதான்!…
தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ஒக்கடு படத்தின் கதையை கொஞ்சம் மாற்றி தரணி இயக்கிய திரைப்படம்தான் கில்லி. இப்படம் 2004ம் வருடம் வெளியாகி தமிழகத்தில் வசூலில் சக்கை போடு போட்டது. இப்படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார்.
மதுரையில் அட்ராசிட்டி செய்து வரும் முத்துப்பாண்டியின் வெறித்தனமான காதலில் இருந்து தப்பித்து விஜயிடன் தஞ்சம் புகும் திரிஷா மெல்ல மெல்ல அவரை காதலிக்க துவங்கும் கதை. சென்னையில் தனது வீட்டில் அப்பாவுக்கே தெரியாமல் அவரை மறைத்து வைத்திருக்கும் விஜய், திரிஷாவை தேடியும், விஜயை போட்டு தள்ளவும் சென்னை வந்து தேடும் பிரகாஷ் ராஜ் என பரபர திரைக்கதையை தரணி அமைத்திருந்தார்.
இதையும் படிங்க: என்னால அவர் எதிர்காலம் பாதிக்கக் கூடாது.. விஜய் நடிக்க மறுத்த திரைப்படம்..
இந்த படத்தை பார்த்த மகேஷ்பாபு எனது ஒக்கடு படத்தை விட கில்லி படம் சிறப்பாக இருந்தது என சொல்லி இருந்தார். கில்லி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது. விஜய்க்கு அதிக வசூலை பெற்ற முதல் படம் இதுதான். அதோடு, தமிழ் சினிமாவில் ரூ.50 கோடி வசூல் செய்த முதல் திரைப்படமும் இதுதான். இதுவரை எந்த நடிகருக்கும் இது அமையவில்லை.
இந்த படத்தின் வெற்றிதான் விஜயை வசூல் சக்கரவர்த்தியாக மாற்றியது. அதன்பின்னர்தான் விஜயின் சம்பளமும் எகிறியது. இந்த நிலையில்தான் இப்படத்தை சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்தனர். இந்த படத்திற்கு 18 வயதிலிருந்து 20 வயது வரை உள்ள ரசிகர்களே அதிகம் வருவதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: அமர்க்களம் படத்தில் துவங்கி இப்போது வரை!.. 25 வருட வெள்ளி விழாவை கொண்டாடிய அஜித் – ஷாலினி ஜோடி…
இப்போது விஜயின் ரசிகர்களாக இருக்கும் அவர்கள் கில்லி படம் வெளியான போது பிறந்திருக்க மாட்டார்கள். அல்லது 2 வயது சிறுவனாக இருந்திருப்பார்கள். எனவே, விஜயின் ரசிகர்கள் பலரும் இப்படத்தை பார்க்க தியேட்டருக்கு படையெடுத்தனர். அதனால், இப்போது கில்லி படத்திற்கு திரையரங்குகளும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
இதுவரை கில்லி படம் 17 கோடி வரை வசூலை அள்ளி இருக்கிறது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம் அவர் தயாரிப்பில் விஜய் – ஜோதிகா நடித்து 2000ம் வருடம் வெளியான குஷி படத்தை ரி-ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம். அனேகமாக இந்த படமும் விஜய் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.