பழனிக்கே பால் காவடி எடுத்தாலும்!.. கில்லி ரீ ரிலீஸ் முதல் நாள் வசூலை முந்தாத விஷாலின் ரத்னம்!..

Published on: April 27, 2024
---Advertisement---

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து நேற்று வெளியான ரத்னம் திரைப்படம் சில ஏரியாக்களில் வெளியாகாமல் பஞ்சாயத்து நடந்ததாக நடிகர் விஷால் ஆடியோ வெளியிட்டு பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டு இருந்தார்.

உலகம் முழுவதும் எந்த ஒரு தடையும் இன்றி விஷாலின் ரத்தம் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியானது. ஆனால் அந்த படத்தை பார்த்து ரசிகர்களும் விமர்சகர்களும் படத்துக்கு அதிக அளவில் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய்யை விட நான் சின்ன பொண்ணா?.. வயதை வெளிப்படையாக சொன்ன கில்லி அம்மா!..

விஷாலின் முந்தைய படமான மார்க் ஆண்டனி திரைப்படம் முதல் நாளில் 7 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில், இந்த படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு காரணமாக அந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை இரண்டே வாரத்தில் வசூல் செய்தது.

அதேபோல ரத்தம் படமும் விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும் என்கிற எதிர்பார்ப்புடன் படக்குழுவினர் பெரிய அளவில் புரமோஷன் செய்து வந்தனர். ஆனால் திரைப்படத்திற்கு முதல் நாளில் ரசிகர்கள் பெரிதாக ஆதரவு அளிக்கவில்லை.

இதையும் படிங்க:கங்குவா பார்ட் 2ல இவர்தான் வில்லனா?.. சிறுத்தை சிவாவே சொல்லிட்டாரே!.. வெறித்தனம்தான் போங்க!..

விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, கௌதம் மேனன் மற்றும் முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் முதல் நாள் அதிகபட்சமாக 2.30 கோடி ரூபாய் வசூலை ஈட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய், திரிஷா நடித்த வெளியான கில்லி படம் கடந்த வாரம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், முதல் நாளில் 4 கோடி ரூபாய் வசூலை தமிழ்நாட்டில் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுவும் டிக்கெட் விலை வெறும் 110 ரூபாய் தான்.

ஆனால், 200 ரூபாய் டிக்கெட் விலையுடன் நேற்று வெளியான விஷால் படம் வசூல் ரொம்பவே குறைவாக இருப்பது திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. விஷால் படத்தை பார்ப்பதற்கு பதில் விஜய்யின் கில்லி படத்தை பார்க்கலாம் என நேற்றும் இன்றும் ரசிகர்கள் அதிக ஆர்வத்தை இன்னமும் கில்லி படத்தின் மீது செலுத்தி வருவதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: எப்பாடி… இவ்வளவு பெரிய தொகையா? புளூசட்டை மாறன் யூட்யூப் மாத வருமானம் என்ன தெரியுமா?

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.