Cinema History
அந்த விஷயத்தில் எஸ்.பி.பி. ரொம்பவே சூப்பர்… பாடகி சித்ரா கொடுக்கும் சர்டிபிகேட் இதுதான்..!
தமிழ்த்திரை உலகில் பிரபல பாடர்கள் நிறைய பேர் உண்டு. அந்த வகையில், பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பல திரையிசைப் பாடல்களால் லட்சக்கணக்கான ரசிகர்களைத் தன்பால் ஈர்த்துள்ளார். அவருடைய மெலடியான பாடல், துள்ளலான பாடல், பக்திமயமான பாடல் என எதைக் கேட்டாலும் அது சுகம் தான். நம்மை எளிதில் மெய்மறக்கச் செய்யும் ஆற்றல் அவரது காந்தக் குரலுக்கு உண்டுஇங்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா ஆகியோரைப் பற்றிப் பார்ப்போம்.
எஸ்.பி.பி.யைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? அவரிடம் நீங்கள் கற்றுக்கொண்ட விஷயம் என்ன என்று நிருபர் ஒருமுறை சித்ராவிடம் கேள்வி கேட்டாராம். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
இதையும் படிங்க… விஜய் நடிக்க வேண்டிய படம்.. சிம்புவை வைத்து களமிறங்கும் இயக்குனர்! இது புது அப்டேட்டால இருக்கு
எஸ்.பி.பி.யைப் பொறுத்தவரை கூட வேலை செய்றவங்களை எப்பவும் உற்சாகமாக வைத்துக் கொள்வார். வெளிநாடுகள்ல சில நாள்கள் இசை நிகழ்ச்சிகள் நடக்கும். அப்போது ஓய்வு நேரம் குறைவாகவே இருக்கும். எங்களை விட வரும் இசைக்கலைஞர்களுக்குத் தான் அதிகமா வேலை இருக்கும். நிகழ்ச்சி அரங்கில் முதல்ல நுழையறவங்க அவங்க தான். அதே போல கடைசியா வெளியேறுபவர்களும் அவங்க தான்.
ஒரு தடவை எங்களுக்காக ஒரு ஓட்டல் அறையில் தங்க ஏற்பாடு செய்து இருந்தாங்க. பாடகர்களை முதலில் அறைக்கு போகச் சொன்னார்கள். அதே நேரம் இசைக்கலைஞர்களுக்கு அறை தயாராகவில்லை. அப்போது நள்ளிரவு 12 மணி ஆகிவிட்டது. பாலு சாரிடம் நீங்க வேணும்னா உங்க அறைக்குப் போகலாமே சார்னு சொன்னாங்க. ஆனால் அவர் அதற்கு மறுத்து விட்டார். இசைக்கலைஞர்களுக்கான அறை தயாரான பிறகு தான் என்னோட அறைக்குச் செல்வேன்னு சொல்லிவிட்டாராம்.
இதையும் படிங்க… மே 1ல் பெரிய ட்ரீட்தான்.. அஜித் அனுமதிக்காக காத்திருக்கும் ‘விடாமுயற்சி’ டீம்! அதாவது நடக்குமா?
அதுமட்டுமல்லாமல் அவங்களுக்கு எல்லாருக்குமே அறை தயாராகுற வரை அங்கேயே காத்துக்கிட்டு இருந்தாராம். எந்த ஒரு பெரிய பாடகரும் இப்படி ஒரு மனிதாபிமானமா இருப்பாங்களான்னு தெரியல. இது மாதிரியான விஷயங்களை நான் அவரிடமிருந்து தான் கற்றுக்கொண்டேன் என்கிறார் பாடகி சித்ரா. தன்னடக்கம், பணிவு, பெருந்தன்மை எப்பவுமே அவரிடம் இருக்கும். கர்வத்தைப் பார்த்ததே இல்லை என்றும் சொல்கிறார் சித்ரா.