Connect with us
Manobala, Mic Mohan

Cinema News

மோகனுக்காக பட வாய்ப்பு தேடி அலைந்த மனோபாலா… பதிலுக்கு அவர் செய்ததுதான் ஹைலைட்…

தமிழ்த்திரை உலகில் வெள்ளி விழா நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் மைக் மோகன். இவரது படங்கள் என்றாலே பாடல்கள் செம மாஸாக இருக்கும். இன்று வரை மோகன் ஹிட்ஸ் தான் பிரபலமாக உள்ளது.

இரவு நேரங்களில் நிலவு தூங்கும் நேரம் என்று இவரது மெலடி பாடலைக் கேட்காத 80ஸ் கிட்ஸ்களே இல்லை எனலாம். இவரது படங்களில் பெரும்பாலும் மைக் வைத்து மேடைகளில் பாட்டு பாடி அசத்தியதால் இவரை மைக் மோகன் என்றே ரசிகர்கள் அழைத்தனர். சினிமாவிற்குள் இவர் நுழைந்தது எப்படி என்று பார்ப்போம்.

நடிகர் மைக் மோகன் ஆரம்பத்தில் கமலின் கன்னடப்படம் கோகிலாவில் நடித்தார். இதனால் அவரை அப்போது கோகிலா மோகன் என்றே அழைத்தார்களாம். அதன்பிறகு நடிகரும், இயக்குனருமான மனோபாலாவும், ஸ்டில்ஸ் ரவியும் தான் மோகனை தமிழ்த்திரை உலகிற்கு அழைத்து வந்தார்களாம். இவர்களில் மனோபாலா ஒரு கையில் மோகனின் போட்டோவை வைத்துக் கொண்டு ஒவ்வொரு படகம்பெனியாக ஏறி இறங்கி வாய்ப்பு தேடி அலைந்துள்ளார்.

Pillai nila

Pillai nila

அப்படி வந்த வாய்ப்பு தான் மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற படம். மோகன் அறிமுகமான முதல் தமிழ்ப்படமும் இதுதான். தொடர்ந்து கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, மனைவி சொல்லே மந்திரம் ஆகிய படங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து அவரது வாழக்;கையில் பல மாற்றங்கள் வந்தன. அப்படி ஒருமுறை அவரதுவாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் வந்தது. சினிமா துறையில் பெரிய ஹீரோவாகவும் ஆனார்.

அவரது இந்த அபார வளர்ச்சிக்குக் காரணம் மைக் மோகன், ஸ்டில்ஸ் ரவி தான். அதனால் தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களிடம், மோகன் என்ன சொல்வார் தெரியுமா? நான் நடிக்கிறேன். ஆனால் உங்க படத்தை இயக்குற பொறுப்பு மனோபாலாவுக்குத் தான் கொடுக்க வேண்டும் என்றார். அப்படி பல படங்கள் அவருக்கும் கிடைத்ததாம்.

இதையும் படிங்க… உங்க படத்துல ஐட்டம் சாங்!. அஜித்துக்கு நான் ஜோடி!. கோட் படத்திலிருந்து எஸ்கேப் ஆன நடிகை!…

அந்த வகையில் பிள்ளை நிலா, பாரு பாரு பட்டணம் பாரு, நான் உங்கள் ரசிகன் ஆகிய படங்கள் மனோபாலாவுக்கு கிடைத்தது. இவற்றில் பிள்ளை நிலா படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இவற்றில் ஸ்டில்ஸ் ரவி, மனோபாலா, மோகன் கூட்டணியில் உருவான படம் நான் உங்கள் ரசிகன் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top