Connect with us
Ilaiyaraja

Cinema News

இளையராஜா இரண்டே கருவிகளில் இசையமைத்த மெகா ஹிட் பாடல்!.. எந்தப் பாட்டுன்னு தெரியுதா?..

இசைஞானி இளையராஜா ரொம்பவே குறைவான இசைக்கருவிகளைக் கொண்டும் பாடலைக் கொடுத்து இருக்கிறார். அது கேட்பதற்கு ரொம்பவே இதமாக இருப்பது தான் ஆச்சரியம். வாங்க அது என்ன பாடல்னு பார்ப்போம்.

மௌனராகம் படத்தில் மன்றம் வந்த தென்றலுக்கு என்ற பாடலை இளையராஜா கீரவாணி ராகத்தைத் தழுவி பாடியிருப்பார். மோகன் டெல்லியில் வேலை பார்ப்பவர். சென்னையில் துருதுருன்னு இருக்கும் ரேவதியைப் பொண்ணு பார்க்க வருகிறார். வரும்போதே பிடிக்காது என்று சொல்லி விடுகிறார்கள். அதையும் தாண்டி திருமணம் செய்து கொண்டு டெல்லிக்கு செல்கிறார்.

அங்கு இருவருக்கும் ஒத்து வராது. மோகனுக்குப் பிடிக்கும். ஆனால் ரேவதி எடுத்தெறிஞ்சிப் பேசறாரு. முதலில் கார்த்திக்கை லவ் பண்ணினேன். அந்த இடத்தில் உன்னை வைத்துப் பார்க்க பிடிக்கவில்லை என்கிறார் ரேவதி. அப்படின்னா உனக்கு என்ன பிடிக்கும்னு கேட்க விவாகரத்து கேட்கிறார். ஆனால் அதற்கு கோர்ட் அனுமதிக்கவில்லை. ஒரு வருஷம் சேர்ந்து இருங்க. இதற்குள் உங்களுக்குள்ள மனமாற்றம் எதுவும் இல்லை என்றால் டைவர்ஸ் தந்துடலாம்னு சொல்றாங்க.

அதே நேரத்துல இரண்டு பேரும் சேர்ந்து வாழறாங்க. இவர்களுக்குள் முரண்பாடும், அன்பும் கலந்து வருகிறது. இந்த நேரத்தில் வரும் பாடல் தான் இது. கிட்டார் பாடல் முழுவதும் தீம் மியூசிக் போட்டுக் கொண்டு இருக்கும்.

Mouna ragam

Mouna ragam

இந்தப் பாடலைப் பொருத்தவரை சாக்ஸபோன், டிரம் என இரண்டு இசைக்கருவிகளை மட்டும் பிரதானமாகப் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா. இடையிடையே கிட்டாரும் வரும்.

இந்தப் பாடலை எஸ்.பி.பி. வெகு அழகாகப் பாடியிருப்பார். வாலி நேர்த்தியாக இந்தப் பாடலை எழுதியிருப்பார். ஆணின் உணர்வு தவிப்பு, பெண்ணின் உரிமை, உணர்வுகளுடைய முக்கியத்துவம் என இரண்டையும் இந்தப் பாடலில் கையாண்டிருப்பார். எஸ்பிபி.யின் ஹம்மிங்கே நம் மனதை வயப்படுத்தும் வகையில் இருக்கும். மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ… அன்பே என் அன்பே, தொட்ட உடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே, பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ சொல் என்று பல்லவி போட்டு இருப்பார் கவிஞர் வாலி.

பெண்ணின் உணர்வுகளும், ஆணின் தவிப்பும் இந்தப் பல்லவியிலேயே வந்து விடுகிறது. முதல் சரணத்தில் தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன..? நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவை என்ன? என்ன ஒரு அருமையான வரிகள் என்று நினைத்துப் பாருங்கள். சொந்தங்களே இல்லாமல் பந்தபாசம் கொள்ளாமல் பூவே உன் வாழ்க்கை தான் என்ன? சொல்… சொல்… என அழகாக எழுதியிருப்பார் வாலி.

இதையும் படிங்க… விஜய் சேதுபதியின் விசிட்டிங் கார்ட் இதுவா? லீக்கான மொபைல் எண்கள்… வைரலாகும் புகைப்படம்!..

வாழ்க்கையில் திருமணம் செய்துவிட்டால் அவ்வளவு சீக்கிரம் வெளியே போக முடியாது என்று சொல்கிறார். நிலவுக்கு வானத்தை விட்டா வேறு கதியில்லை. அதே போல தான் எனக்கும். இந்த நிலையில் நாம் சேர்ந்து வாழ்ந்தால் தான் என்ன என்று பொருள்படும்படி அழகாக எழுதியிருப்பார் வாலி.

மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top