
Cinema News
துப்பாக்கியால் சுடப்போன சிவாஜி!.. நடிகையால் மார்க்கெட்டை இழந்த பிரபு!.. இவ்வளவு நடந்திருக்கா!..
Published on
By
நடிகர் திலகம் சிவாஜியின் இளைய மகன் பிரபு. முதலில் இவரை ஒரு போலீஸ் அதிகாரி ஆக்க வேண்டும் என்றுதான் சிவாஜி ஆசைப்பட்டார். அதற்காக குதிரை ஏற்றம் உள்ளிட்ட பல பயிற்சிகளை அவர் பிரபுவுக்கு கொடுத்தார். அதோடு, குண்டாக இருந்த பிரபுவின் உடலை குறைக்க பல முயற்சிகளும் சிவாஜி எடுத்தார்.
ஆனால், வெளிநாட்டில் படித்துவிட்டு சென்னை வந்த பிரபுவுக்கோ நடிப்பின் மீதுதான் அதிக ஆர்வம். துவக்கத்தில் சிவாஜி இதற்கு சம்மதிக்கவில்லை. குடும்பத்தினர் ஒருவழியாக அவரை சம்மதிக்க வைத்து பிரபுவை நடிகராக மாற்றினார்கள். பிரபுவின் முதல் படமான ‘சங்கிலி’ படத்தில் சிவாஜி முக்கிய வேடத்தில் நடித்து கொடுத்தார்.
இதையும் படிங்க: கமல் கையை வச்சே இந்தியன் தாத்தா கண்ணை குத்தும் கல்கி!.. என்ன சிவாஜி இப்படி ஆகிப்போச்சே!..
அதன்பின் பிரபு தனியாக பல படங்களிலும் நடித்து 80,90களில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்தார். பி.வாசுவின் இயக்கத்தில் பிரபு நடித்த பெரும்பலான படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. குறிப்பாக குஷ்புவுடன் இணைந்து பிரபு நடித்த சின்னத்தம்பி படம் வசூலை அள்ளியது. அதன்பின் குஷ்புவுடன் பல படங்களிலும் தொடர்ந்து பிரபு நடித்தார்.
பிரபுவுக்கு திருமணமாகி இருந்த நிலையிலும் குஷ்புவுக்கும் அவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. பிரபுவையே தனது கணவராக நினைத்தார் குஷ்பு. ஒரு சூழ்நிலையில், குஷ்புவை பிரபு ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், குஷ்பு கர்ப்பமாக இருப்பதாகவும் சில பத்திரிக்கைகள் எழுத சிவாஜிக்கு கோபம் வந்துவிட்டது.
துப்பாக்கியை எடுத்து பிரபுவை அவர் சுட முயன்றதாகவும், ஆனால், பிரபு அதிலிருந்து தப்பியதாகவும் சொல்லப்பட்டது. சிவாஜியின் குடும்பத்தினர் குஷ்புவிடம் சென்று நேரில் பேசி பிரபுவுடன் இருக்கும் உறவை துண்டித்துக்கொள்ளுமாறு சொன்னதாகவும், சிவாஜியின் கவுரவம் கருதி குஷ்புவும் அதற்கு சம்மதித்ததாக சொல்லப்பட்டது.
இதையும் படிங்க: கமல் கையை வச்சே இந்தியன் தாத்தா கண்ணை குத்தும் கல்கி!.. என்ன சிவாஜி இப்படி ஆகிப்போச்சே!..
இதனால் பிரபுவின் மார்க்கெட் குறைந்துபோனது. ஏனெனில், குஷ்புவை பிரபுவை ஏமாற்றிவிட்டார் என்கிற இமேஜ் ரசிகர்கள் மனதில், குறிப்பாக பெண்கள் மனதில் ஏற்பட்டது. இதனால், மறவன் படத்தில் 75 லட்சம் சம்பளம் வாங்கி நடித்த பிரபுவின் மார்க்கெட் அதாளபாதாளத்திற்கு போய் அவரின் சம்பளம் வெறும் 5 லட்சமாக மாறி சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் குணச்சித்திர நடிகராகவும் பிரபு மாறிவிட்டார்.
ஒருபக்கம், இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்ட குஷ்பு இரண்டு பெண் குழந்தைகளுக்கு தயாக மாறி தனது குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ துவங்கினார்.
ரங்கராஜ் முகத்திரை கிழிப்பு : மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா என்பவரை ஆசை வார்தத்தை கூறி ஏமாற்றி...
தீயாய் வேலை செய்யும் விஜய் : விஜய் பேச்சில் ஏற்பட்ட தடுமாற்றம் : விஜயின் பேச்சு பல விமர்சனங்களை சந்தித்தாலும் இன்று...
சினிமா நடிகர் பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா கூறி...
Vijay TVK: திருச்சியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்த விஜய் இன்று நாமக்கல் , கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த...
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பாரதிராஜா. தன்னுடைய படங்களில் புதுமை புகுத்தி அதுவரை வந்து கொண்டிருந்த படங்களிலிருந்து...