Connect with us

Cinema History

அந்த நடிகையால் எனக்கும், குஷ்பூவுக்கும் சண்டை… என்ன நடந்தது தெரியுமா? சுந்தர்.சி சொன்ன சுவாரஸ்ய தகவல்…

SundarC: இயக்குனர் சுந்தர் சிக்கும் அவர் மனைவி குஷ்புவுக்கும் ஒரு நடிகையால் உருவான பிரச்சனை குறித்து அவர் தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்று தெரிவித்திருக்கிறார்.

முறைமாமன் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி. முதல் படமே நல்ல வரவேற்பு கொடுக்க தொடர்ச்சியாக அவருக்கு பட வாய்ப்புகள் அமைந்தது. அதைத் தொடர்ந்து அவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: இளையராஜா – வைரமுத்து ரெண்டு பெருமே வொர்த் இல்ல!.. கங்கை அமரன் உளறக்கூடாது!. பிரபலம் சொல்வது என்ன?..

ரஜினிகாந்தை வைத்து அருணாச்சலம் படத்தையும், கமல்ஹாசனை வைத்து அன்பே சிவம் படத்தையும் இயக்கி இருக்கிறார். இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இது ஒரு புறம் இருக்க கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பூவை காதலித்து கைப்பிடித்தார். இருவரது திருமண வாழ்க்கையும் அமோகமாக தொடங்கியது.

ஒரு கட்டத்தில் நடிகை குஷ்பூ கர்ப்பமாக இருந்திருக்கிறார். தனக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு மாளவிகா என பெயர் வைக்கவும் முடிவு செய்திருந்தாராம். இதை சுந்தர்.சியிடம் கூறி சந்தோஷம் அடைந்திருக்கிறார். அந்த நேரத்தில் சுந்தர் சி இயக்கிக் கொண்டிருந்த திரைப்படம் உன்னை தேடி. இப்படத்தில் அஜித் நாயகனாக நடித்திருந்தார். புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தும் முடிவில் படக்குழு இருந்தது. தேவா இப்படத்திற்கு இசையமைப்பு செய்து வந்தார். 

இதையும் படிங்க: இளையராஜாவுடன் உடனே நடந்தது… அந்த பிரபலத்துக்காக மூன்று மாதம் காத்திருந்த ஏ.ஆர்.ரஹ்மான்!…

குறிப்பிட்ட பாடல் ஒன்றுக்கு நாயகியின் பெயர் வேண்டும் என சுந்தர்சியை அழைத்து கேட்க அவரும் யோசிக்காமல் மாளவிகா எனவே பெயர் வைத்து விடலாம் எனவும் கூறியிருக்கிறார். தேவாவும் பெயர் நன்றாகவே இருக்கிறது என தெரிவித்து அந்த பெயரிலேயே பாடலை உருவாக்கி விட்டார்.

புதுமுக நாயகிக்கு மாளவிகா என்ற பெயரையும் படத்தில் போட்டு விட்டனர்.  படம்  வெளியாகி  நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் மாளவிகாவும் தற்போது கோலிவுட்டில் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்று விட்டார்.ஆனால் மகளுக்காக தேர்ந்தெடுத்த பெயரை இப்படி செய்து விட்டாரே என குஷ்பு தான் சுந்தர் சி மீது சமகாலத்தில் இருந்ததாகவும் கலகலப்பாக தெரிவித்திருக்கிறார்.                                                                                                     

google news
Continue Reading

More in Cinema History

To Top