Cinema History
ரஜினியை வைத்து மறுபடியும் படம் எடுப்பாரா கே.எஸ்.ரவிகுமார்? தெனாலி ரீ ரிலீஸ் எப்போது?
தமிழ்ப்பட உலகின் வெற்றிப் பட இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் கமலை வைத்து 2000த்தில் தெனாலி என்ற படத்தைத் தயாரித்து இயக்கினார். தசாவதாரம், அவ்வை சண்முகி என்ற மெகா ஹிட் படங்களையும் கொடுத்தார். அதே போல ரஜினியை வைத்து முத்து படத்தைக் கொடுத்தார். அடுத்து படையப்பா, லால் சலாம் ஆகிய படங்களைக் கொடுத்துள்ளார்.
இவற்றில் லால் சலாம் படத்தை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்றாலும் அதன் மேற்பார்வையாளராக கே.எஸ்.ரவிகுமார் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ரஜினிகாந்தை வைத்து மீண்டும் படம் இயக்குவீர்களா என்ற நிருபரின் கேள்விக்கு இவ்வாறு பதில் அளிக்கிறார் கே.எஸ்.ரவிகுமார்.
இதையும் படிங்க… குக் வித் கோமாளி நடந்த பிரச்னை என்ன? எதுக்காக வெளியேறினார் வெங்கடேஷ் பட்… ஷாக் தகவல்…
ரஜினியை வைத்து 3 படம் எடுத்து இருக்கிறேன். மறுபடியும் நான் படம் எடுக்கணும்னா அவரு தான சொல்லணும். ரஜினி சாரை நான் அடிக்கடி மீட் பண்றேன். இப்போ கூட ஹிட் லிஸ்ட் பட புரொமோஷனுக்காக அவரைப் போய் சந்தித்தேன்.
படங்கள் எடுப்பது என்பது இவர் தான் டைரக்டர், இவர் தான் புரொடியூசர், இவர் தான் ஹீரோங்கறது எல்லாம் அமையணும். அப்போ தான் நாம என்ன நினைக்கிறோமோ அதை சொல்லப் போறோம். செய்யப் போறோம்.
முத்து படம் ரீ ரிலீஸ் ஆச்சு. புரொடியூசரே பண்ணாங்க. தியேட்டர்ல போயி பார்த்தேன். நல்ல ரெஸ்பான்ஸ் ஆச்சு. தெனாலி என்னோட சொந்த படம். அதுக்கு எல்லாம் வாய்ப்பு வரும்போது நான் பண்ணுவேன். படங்கள் கம்மியா இருக்கு. படங்கள் இந்த சீசன்ல சரியா ஓடல. தியேட்டர்ஸ் நிறைய இருக்கு.
இதையும் படிங்க… அந்த நடிகையால் எனக்கும், குஷ்பூவுக்கும் சண்டை… என்ன நடந்தது தெரியுமா? சுந்தர்.சி சொன்ன சுவாரஸ்ய தகவல்…
அந்த மாதிரி நேரத்துல ரீ ரிலீஸ் பண்ணினா புரொடியூசருக்கு நல்லது. ஆடியன்ஸ் பழைய படங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பாங்க. அதனால அந்தப் படங்களை ரீ ரிலீஸ் பண்ணும்போது புரொடியூசருக்கு நல்ல லாபம் தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கமல் சிங்களத் தமிழில் காமெடியாகப் பேசி அசத்திய தெனாலி மெகா ஹிட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயராம் கமலுடன் இணைந்து கலக்கியிருப்பார்.