Cinema History
அவரை போல ஒருத்தர பார்க்கவே முடியாது!. நடிகர் செஞ்ச வேலையில் நெகிழ்ந்து போன சத்தியராஜ்!..
சினிமாத்துறையில் எப்போதும் போட்டி, பொறாமைகள் அதிகம். யாரையும் சுலபத்தில் தூக்கி விட மாட்டார்கள். அவ்வளவு சீக்கிரத்தில் வாய்ப்பு கிடைக்காது. வைரமுத்துவே பாரதிராஜாவின் அலுவகத்திற்கு பல மாதங்கள் அழைந்து அவரை சந்தித்து பாடல் எழுத வாய்ப்பு தேடினார். ஆனால், அவரால் பாரதிராஜாவை பார்க்க கூட முடியவில்லை. வைரமுத்துவின் கவிதை புத்தகத்தை வாசித்துவிட்டுதான் வாய்ப்பு கொடுத்தார் பாரதிராஜா.
கீழே இருப்பவனை மேலே தூக்கிவிட்டால் நம்மை மதிக்கமாட்டார்கள் என்று நினைத்து யாரும் யாருக்கும் உதவி செய்யவே மாட்டார்கள். ஒருவன் கஷ்டப்பட்டு மேலே வந்தாலும் அவன் காலை வாரி விடவும். அவனது இடத்தை தட்டி பறிக்கவும் பலரும் காத்திருப்பார்கள். எனவே, நல்லவனை கூட சினிமா கெட்டவனாக மாற்றிவிடும்.
இதையும் படிங்க: மணிரத்னத்தை இப்படியா அவமானப்படுத்துறது? ‘ரோஜா’ படத்தில் இளையராஜா காட்டிய ஆட்டியூட்!
‘நமக்கு யாரும் உதவவில்லை. நாம் ஏன் மற்றவர்களுக்கு உதவ வேண்டும்?’.. என்கிற எண்ணம் பலருக்கும் வரும். அதை தவிர்க்கவே முடியாது. ஆனால், அப்படிப்பட்ட சினிமா உலகில் என்.எஸ்.கிருஷ்ணன் போல சில நல்லவர்கள் இருந்தார்கள். ஆனால், ஜெய்சங்கர் போல மற்றவர்களுக்கு உதவிய ஒரு நடிகரை யாராலும் பார்க்கவே முடியாது. அவரால் வாழ்ந்த தயாரிப்பாளர்கள் பலர்.
ஒருவர் தயாரிப்பாளர் ஆக விரும்புகிறார். ஆனால், அவரிடம் பணம் இல்லை என்றால் அதற்கும் ஜெய்சங்கர் உதவி செய்வார். சம்பளத்தை தவிர படமெடுக்க தேவைப்படும் பணத்தை ஒரு ஃபைனான்சியர் மூலம் வாங்கி கொடுப்பார். நடிகர், நடிகைகளிடம் அவரே பேசி ‘இப்போது எதுவும் தரமுடியாது. படம் ரிலீஸான பின் நானே சம்பளத்தை வாங்கி தருகிறேன்’ என சொல்வார். இப்படி பல படங்களை உருவாக்கி சொன்னதை செய்தும் காட்டி இருக்கிறார். அதனால்தான். தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த நடிகராக ஜெய் சங்கர் இருந்தார்.
இதையும் படிங்க: அவங்களாம் இல்ல.. புது ’தக்’ இவரு தான்.. புதிய அறிவிப்பை வெளிட்ட தக் லைஃப் படக்குழு!…
குறிப்பாக தான் செய்த நல்ல விஷயங்களுக்கான கிரெட்டிட்டையும் அவர் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார். இது போல ஒரு சம்பவத்தை நடிகர் சத்தியராஜ் ஊடகம் ஒன்றில் பகிர்ந்து கொண்டார். ‘நாளை உனது நாள்’ என்கிற படத்தின் படப்பிடிப்புக்காக நாகர்கோவிலில் இருந்தோம். அடுத்தநாள் நடிகர் செந்தாமரைக்கு பிறந்தநாள் என தெரிய வந்ததும் அன்று அதிகாலை ஒரு பெரிய மாலை வாங்குவதற்காக தேடினோம். ஆனால், கிடைக்கவில்லை. சரி கையை மட்டும் கொடுத்து வாழ்த்து சொல்வோம் என சொல்லி படப்பிடிப்பு தளத்திற்கு வந்தோம்.
அப்போது ஆளுர மாலையோடு ஜெய்சங்கர் அங்கே காத்திருந்தார். மேலும், செந்தாமரையிடம் ‘உங்களுக்காக நான், சத்தியராஜ், விஜயகாந்த் எல்லோரும் சேர்ந்து மாலை வாங்கி வந்தோம்’ என சொல்லியதோடு மட்டுமில்லாமல் எங்கள் எல்லோரின் கையிலும் அந்த மாலையை பிடித்து அவருக்கு போட வைத்தார். சினிமாவில் அப்படி யோசிக்கும் மனிதர்களை பார்க்கவே முடியாது’ என சத்தியராஜ் நெகிழ்ந்து பேசினார்.