Cinema History
இயக்குனர் செய்த அந்த சதி வேலை… விரட்டி அடித்த இளையராஜா… நடந்தது இதுதான்..!
இளையராஜாவைப் பற்றியும் தற்போது அவர் மீதுள்ள சர்ச்சை குறித்தும் பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
இளையராஜா வைரமுத்துவுக்கு இடையே பல ஆண்டுகாலமாக பிரச்சனை நடந்து வருகிறது. இது முழுக்க முழுக்க ஈகோ பிரச்சனை தான். வைரமுத்து இவரை சமீபத்தில் ஞானியா, அஞ்ஞானியான்னு கேட்டபோது கங்கை அமரன் வரிந்து கட்டிக்கொண்டு என் அண்ணனோட நிழல்ல தான் நீ வந்தேன்னு வைரமுத்துவைப் பற்றிக் காட்டமாகப் பேசினார்.
இதையும் படிங்க… மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில் ஒரிஜினல் பாய்ஸும் இருக்காங்களா… அந்த சீனை சரியா பார்த்தீங்களா?
வைரமுத்துவுக்கு முன் கண்ணதாசன் தான் லெஜண்ட். அவருக்குப் பிறகு பலர் வந்தும் யாரும் செழிப்பாக இல்லை. ஆனால் வைரமுத்து இன்று செழிப்பாக இருக்கிறார். அவரது திறமையைத் தாண்டி அவர் செழிப்பாக இருக்காருன்னா அதுக்கு இளையராஜா கொடுத்த வாய்ப்புகள் தான் காரணம்.
90 காலகட்டங்களில் இளையராஜா பாரதிராஜா படத்துக்கு இசை போட்டாராம். அப்போது வைரமுத்து வர லேட்டாகி விட்டதாம். அதனால் காண்டாகிப் போன இளையராஜா தானே பாடல் எழுதி ரெக்கார்டிங்கும் பண்ணிவிட்டாராம். அது வைரமுத்துவுக்கு அதிருப்தியாகி விட்டதாம். இது போல அதன்பிறகும் ஒருசில சம்பவங்கள் நடந்துள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இல்லன்னா வைரமுத்து அந்தக் காலகட்டத்தில் காணாமல் போயிருப்பார். வைரமுத்துவே ஒரு முறை இப்படி சொன்னாராம். தஞ்சை பெரிய கோவிலின் கதவு அடைத்ததும், மதுரை மீனாட்சி அம்மனின் கோவில் கதவு திறந்தது. அப்படி கிடைத்தவர் தான் ஏ.ஆர்.ரகுமான் என்றாராம்.
ஒரு விழாவில் வைரமுத்து ரகுமானைப் பற்றி இப்படிப் பேசிவிட்டார். ரகுமான் உங்களுடைய பாடலில் எனது வரிகள் வெளியே தெரியவில்லை. இசை தான் முன்னாடி வந்து நிற்கிறது. இனி வரிகளையும் தெரிய வையுங்கள் என்றாராம். அதன்பிறகு வைரமுத்துவை ரகுமானும் ஓரம் கட்டிவிட்டாராம்.
இதையும் படிங்க… எத்தனை தடவ சொன்னாலும் இடுப்பை அப்படி ஆட்டிட்டு வர முடியல!… ‘அரங்கேற்றம்’ பிரமீளா கண்ணீர்
சீனுராமசாமி ஒரு படத்துக்கு யுவன் இசையில் மதன் கார்க்கியின் வரிகளில் இளையராஜாவை பாட வைக்கத் திட்டம் போட்டாராம். இதை இளையராஜாவிடமும் சொல்லவில்லை. அதுமட்டுமல்லாமல் யுவனுக்கும் முழுசாக சொல்லவில்லையாம். சீனுராமசாமி போய் இளையராஜாவிடம் சொன்னதும் விரட்டி விட்டாராம்.
“போய்யா… யாரைக் கேட்டு இதெல்லாம் பண்ணுன”ன்னு சத்தம் போட்டாராம். அதன்பிறகு யுவனிடமும் எச்சரிக்கை விடுத்தாராம். ‘ஆடு பகை குட்டி உறவா..?’ ன்னு. அந்தளவுக்கு இளையராஜா பிடிவாதமானவர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.