Connect with us

Cinema News

மஞ்சுமெல் பாய்ஸை மதிக்காத ஓடிடி நிறுவனங்கள்!.. பகத் ஃபாசில் படம் பல கோடிக்கு ஓடிடியில் விற்பனையா?..

மலையாளத்தில் இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படம் என்றால் அது மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தான். அதிகபட்சமாக 240 கோடி வசூலை அந்த படம் ஈட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

ஆனால், ஓடிடி வியாபாரத்தில் அந்தப் படத்தில் நீ எந்தவொரு நிறுவனமும் முதலில் பெரிய தொகை கொடுத்து வாங்குவதற்கு தயாராக இல்லை என்கிற நிலைதான் இருந்தது.

இதையும் படிங்க: யாஷின் படத்தில் நயன்தாரா!.. சம்பளம் இத்தனை கோடியா?!.. ரொம்ப ஓவராத்தான் போறீங்க!..

நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெறும் 10 கோடி ரூபாய்க்கு மட்டுமே மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை ஓடிடியில் வாங்கி வெளியிடம் முன்வந்தது. ஆனால், படத்தின் வசூல் 200 கோடி ரூபாயை தாண்டி விட்டது என்றும் 20 கோடியாவது கொடுங்கள் என படக்குழு கெஞ்சி நிலையிலும் நெட்பிளிக்ஸ் அந்தப் படத்தை கண்டுக்கவே இல்லை.

கடைசியாக 15 கோடி ரூபாய்க்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கி கடந்த மே ஐந்தாம் தேதி வெளியிட்டது. ஆனால், பகத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் படத்திற்கு ஓடிடியில் கடும் போட்டி நிலவியதாகவும், பெரிய தொகை கொடுத்த அமேசான் நிறுவனம் அந்தப் படத்தை வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க: வின்னர் படத்துல வடிவேலுவுக்கு பதிலா நடிக்க இருந்தது அவரா? அப்புறம் எப்படி மிஸ் ஆச்சு?

மே 9-ஆம் தேதி நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள ஆவேசம் திரைப்படத்தை அதிகபட்சமாக 35 கோடி கொடுத்து அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறுகின்றனர்.

பகத் ஃபாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் திரைப்படம் லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் என்கிற கணக்கில் அதிகபட்சமாக 150 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. பகத் ஃபாசிலுக்கு உலகம் முழுவதும் உள்ள மார்க்கெட் காரணமாக இந்த தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். புஷ்பா 2 படத்தை ஓடிடியில் 250 கோடிக்கு வாங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: பக்கா ஸ்கெட்ச் போட்ட கமல்!.. தக் லைப் படத்தில் சிம்பு வந்ததன் பின்னணி!..

google news
Continue Reading

More in Cinema News

To Top