Actor Kamal: தமிழ் சினிமாவில் உலகநாயகனாக கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக தனது ஆதிக்கத்தை சினிமாவில் செலுத்தி வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவருடைய சினிமா பங்களிப்பு என்பது வரையறைக்கு உட்படாதது. சினிமாவில் இருக்கும் அத்தனை நுணுக்கங்களை பற்றியும் தன் கைவிரல் நுனியில் வைத்திருப்பவர்.
இன்றைய காலகட்டத்தில் எடுக்கப்படும் காட்சிகள் அல்லது தொழில் நுட்பங்கள் இவைகள் எல்லாவற்றிற்கும் ஒரு முன்னோடியாக இருப்பவர் கமல்ஹாசன். சமீபத்தில் கூட ஆவேசம் திரைப்படத்தின் ஒரு காட்சி ரசிகர்களால் ரீல்ஸ்களாக போட்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் அதை அப்பவே செய்துவிட்டார் கமல் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அந்த சீனில் அப்பாஸ் இல்லாம வேறு யாராவது நடிச்சிருந்தா? மனம் திறக்கும் மாளவிகா
குணா படத்தில் அபிராமி அபிராமி என ஹீரோயினை வரிசையில் இருந்து பார்க்கும் அந்த சீனை தான் ஆவேசம் பட காட்சியில் பயன்படுத்தி இருக்கிறார்கள் என கமல் ரசிகர்கள் கூறி வருகின்றார்கள். இதை அப்பவே செய்து விட்டார் கமல் என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர். இதை நாம் கிண்டலாக சொன்னாலும் ஆனால் உண்மையில் கமல் தான் அனைவருக்கும் ஒரு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பிதாமகன். படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றதோடு மிகப்பெரிய அளவில் வசூல் சாதனையும் பெற்றது. விக்ரம், சூர்யா சினிமா கெரியரில் பிதாமகன் திரைப்படம் மிகவும் திருப்புமுனையாக அமைந்த படமாக விளங்கியது.
இதையும் படிங்க: விளம்பரங்களே போதும் போல… படத்துக்கு இவ்வளோ கம்மியாவா? ஆச்சரியப்பட வைக்கும் சூர்யாவின் சொத்து மதிப்பு…
அதே பிதாமகன் என்ற பெயரில் ஏற்கனவே கமல் ஒரு படத்தை எடுக்க இருந்தாராம். இந்த தகவலை கவிதாலயா கிருஷ்ணன் ஒரு பேட்டியின்போது கூறினார் . அதாவது சிவாஜியையும் பாலச்சந்தரையும் வைத்து பிதாமகன் என்ற பெயரில் கமல் ஒரு படம் எடுக்க இருந்தார் ஆனால் அது அப்படியே கைவிடப்பட்டது என அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் கவிதாலயா கிருஷ்ணா. ஆனால் அந்த படத்தின் டைட்டில் இப்போது வேறு ஒரு படத்திற்கு போய்விட்டது என பாலாவின் பிதாமகன் படம் குறித்து பேசி இருந்தார் கிருஷ்ணா.
