அட இது அந்த படம்ல!.. வெளியே கசிந்த ராயன் படத்தின் கதை.. சரியா வருமா?!..

Published on: May 10, 2024
---Advertisement---

Raayan: தனுஷ் நடித்து இயக்கி வரும் ராயன் திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாக்கி இருக்கும் நிலையில் அப்படத்தின் கதை தற்போது   இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆக்‌ஷன் திரில்லராக உருவாகி வரும் திரைப்படம் ராயன். இப்படத்தினை தனுஷ் இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒரு விளம்பரத்துக்கு 2 கோடியா? பெரிய தொகை கொடுத்தும் வேண்டாம் என மறுத்த சாய் பல்லவி…

இப்படத்தின் முதற்கட்ட அறிவிப்பு ஜனவரி 2023ம் ஆண்டு வெளிவந்தது. முதலில் D50 எனக் கூறப்பட்டு இருந்த நிலையில், தற்போது இப்படத்துக்கு ராயன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தின் இறுதியில் படப்பிடிப்பு மொத்தமாக முடிந்தது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இப்படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் இப்படத்தின் வில்லனாக தேவாவை நடிக்க வைக்க தனுஷ் முடிவெடுத்து இருக்கிறார். ஆனால் தனக்கு நடிப்பு செட்டாகாது என தேவா மறுத்துவிட்டார். வடசென்னையில் நடக்கும் கதையாக இருக்கும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் தனுஷின் குடும்பத்தினை கொலை செய்துவிடுகிறார்கள். கொலை செய்தவர்களை தேடிப்போகும் தனுஷ் அவர்களை எப்படி பழி வாங்கினார் என்பதே கதையாக அமைக்கப்பட இருக்கிறதாம்.

இதையும் படிங்க: ஜெயிலர் 2வா?.. அடபோங்கயா!.. தீவில் ஜாலி பண்ணும் நெல்சன்.. கூட யாரெல்லாம் போயிருக்காங்க தெரியுமா?