Cinema News
இளையராஜா பயோபிக்கில் ஏஆர் ரஹ்மானா? சான்சே இல்ல.. அதற்கான காரணத்தை கூறிய பிரபலம்
Ilaiyaraja: ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுமே எதிர்பார்த்துக் கொண்டிருப்பது இளையராஜாவின் பயோபிக். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் தான் இந்த பயோபிக். இதற்கு யார் இசையமைக்க போகிறார்? மற்ற எந்தெந்த கதாபாத்திரங்கள் உள்ளே வரப்போகிறது? என்பதை பற்றி இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஆனால் இளையராஜாவை பற்றி அறிந்த பல பேர் எதிர்பார்க்கும் சம்பவங்கள் இந்த பயோபிக்கில் இடம் பெறுமா என்பது குறித்து தான் சமீப காலமாக கேள்விகள் எழுந்து வருகின்றன. அதாவது இளையராஜாவின் வாழ்க்கை குறிப்பை எடுத்துக் கொண்டால் பல கசப்பான சம்பவங்களும் நடந்து இருக்கின்றன. பாலச்சந்திரனுடன் மோதல், வைரமுத்து, பாரதிராஜா இவர்களுடனான மோதல் சமீபகாலமாக இளையராஜாவின் ஆட்டிட்யூட் போன்றவைகள் எல்லாம் இந்த பயோபிக்கில் இடம் பெற்றால் தான் திரைப்படமாக பார்க்கும் பொழுது இன்னும் சுவாரசியமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: பிரசாந்தின் இன்னொரு முகம் தெரியுமா? இந்திய சினிமாவிலேயே இவர்தான் ஃபர்ஸ்டாம்.. என்ன மேட்டரு பாருங்க
அதிலும் குறிப்பாக ஏ ஆர் ரகுமானின் வருகைதான் இளையராஜாவின் வாழ்க்கையை திருப்பி போட்டது என்று சொல்லலாம். ரோஜா படத்தின் மூலம் அறிமுகமான ஏ ஆர் ரகுமான் அந்த படத்திற்கு பிறகு ஒட்டுமொத்த கோலிவுட்டையே தன் பக்கம் திருப்பினார். அதிலிருந்து இளையராஜாவுக்கு ஒரு மனக்கவலை ஏற்பட்டு விட்டது என்று சொல்லலாம். அது இன்றுவரை ஒரு மனக்கசப்பாகவே இருந்து கொண்டு தான் வருகின்றது.
இந்த நிலையில் பாலச்சந்தருடன் மிகவும் நெருக்கமாக இருந்த கவிதாலயா நிறுவனத்தில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த நடிகரும் தயாரிப்பாளருமான பிரமிடு நடராஜன் இளையராஜா ரகுமான் குறித்து சமீபத்திய ஒரு விழா மேடையில் சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது பிரமிடு நடராஜன் இடம் இளையராஜாவின் பயோப்பிக்கில் ஏ ஆர் ரகுமான் குறித்த விஷயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
இதையும் படிங்க: பிரபுவுக்கு பிடிக்காத கதை!.. விஜயகாந்துக்கு முதல் ஹிட் படம்!.. கேப்டன் ஹீரோவா உருவாகிய அந்த தருணம்!..
அதற்கு பதில் அளித்த பிரமிடு நடராஜன் பட்டிக்காட்டில் இருந்து வந்த ஒரு இளைஞன் மிகவும் கஷ்டப்பட்டு இன்று ஒரு சாதனை படைத்த இளையராஜாவாக மாறி இருக்கிறார். அதை பயோபிக்காக எடுக்கும் பொழுது அதை பார்க்கும் பல இளைஞர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்க வேண்டும். நாமும் கஷ்டப்பட்டு உழைத்தால் ஒரு நல்ல நிலைமைக்கு வர முடியும் என்ற ஒரு நம்பிக்கையை இந்த படம் கண்டிப்பாக கொடுக்கும். அதனால் இது இளையராஜாவை பற்றிய கதையாக தான் இருக்குமே தவிர இந்த மாதிரி ஏ ஆர் ரகுமான் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் எல்லாம் இந்த படத்தில் இருக்காது என கூறினார்.