vj parvathy: ஊடகங்களில் இருந்து சினிமாவுக்கு போனவர்கள் பலரும் இருக்கிறார்கள். பிரியா பவானி சங்கர், திவ்யா, திவ்ய தர்ஷினி, அனிதா என பலரும் இருக்கிறார்கள். இதில், கதாநாயகியாக உயர்ந்தது பிரியா பவானி சங்கர் மட்டுமே. இந்த வரிசையில் இப்போது புதிதாக இணைந்திருப்பவர் விஜே பார்வதி.

பத்திரிக்கை தொடர்பான படிப்பை படித்துவிட்டு ஊடகத்திற்கு வந்தவர்தான் இந்த விஜே பார்வதி. யுடியூப்பில் இளசுகளிடம் எக்குதப்பான கேள்விகளை கேட்டு சர்ச்சையில் சிக்கியவர் இவர். பொதுவாக இளைஞர்களிடம் கேட்க கூச்சப்படும் கேள்விகளை பார்வதி கூச்சப்படமால் கேட்டு பதிலை வாங்கினார்.

இதன் மூலமே நெட்டிசன்களிடம் பார்வதி அதிகம் பிரபலமானார். அப்படியே திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஆனால், ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் படியான ஒரு வேடம் கிடைக்கவில்லை. அர்ஜூன் நடத்திய சர்வைவர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

ஒருபக்கம், மாடலிங் அழகி போல கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். மேலும், அவ்வப்போது சுற்றுலா சென்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் தாய்லாந்துக்கு சுற்றுலா போன பார்வதி கொழுக் மொழுக் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார்.
