Connect with us
Ilaiyaraj

Cinema News

இளையராஜா போடுறது வேஷம்!.. அது யாருக்கும் புரியாது!.. உண்மைகளை உடைக்கும் பிரபலம்..

இளையராஜாவின் அபிமானிகள் அவரை இசை தெய்வம் என்கின்றனர். கண்ணதாசன் ஒரு காலத்தில் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு பாடலில் நான் படைப்பதனால் என் பேர் இறைவன் என்றார். அதே போல நிழல்கள் படத்தில் புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே என்று ஒரு வரி வரும். அந்த வகையில் கர்நாடக இசை வரலாற்றிலேயே பஞ்சமுகி என்ற பெயரில் புதிய ராகத்தைப் படைத்தவர் இளையராஜா. அப்படி என்றால் அவர் இசை தெய்வம் தான் என்கின்றனர். இதற்கு பிரபல யூடியூபர் ஆலங்குடி வெள்ளைச்சாமி என்ன பதில் சொல்கிறார் என்று பார்ப்போம்.

இளையராஜாவுக்கு தற்போது ஆதரவாகப் பேசுபவர்கள் யார் என்றால் பணம் வாங்காமல் இசை அமைத்தவர்கள் எல்லாரும் பேசுவாங்க. வேலு பிரபாகரன், வி.சேகர் போன்ற இயக்குனர்கள் பேசுறாங்க. சங்கிலி முருகன், பஞ்சு அருணாசலம் இவங்க எல்லாம் பெரிய அளவில் பணம் கொடுத்தது இல்லன்னு சொல்றாங்க. அவரோட இசை தான் வேணும்னு காத்துக் கொண்டு இருந்தவர்கள் உதிரிப்பூக்கள் மகேந்திரன், பாசில், பாலுமகேந்திரா என பெரிய பட்டாளமே உண்டு. அவர் இசை அமைத்தப் படங்கள் 1000த்தைத் தாண்டி விட்டது.

தினமும் 18 மணி நேரம் உழைப்பவர். இவருக்குக் கண்ணுக்குத் தெரிவது போல சொத்து கிடையாது. இப்போது தான் ரெக்கார்டிங் தியேட்டர் கட்டியிருக்காரு. நடிகர் திலகம் சிவாஜிக்கு நடிப்பைத் தவிர எதுவும் தெரியாது. அவர் ஓரளவு சொத்து சேர்த்ததுக்குக் காரணம் அவரது தம்பி சண்முகம். எம்ஜிஆருக்கு அவரது அண்ணன் சக்கரபாணி. ரஜினிக்கு ஆரம்பத்தில் பாலசந்தரும், பின்னர் லதாவும் அவரது வரவுகளைக் கவனித்தனர். ஆனால் இளையராஜாவுக்கு யாருமே இல்லை. அவருக்கும் நேரமில்லை. அவருக்கு ஒரு படம் பிடித்துவிட்டது என்றால் தயாரிப்பாளரிடம் பணம் இல்லாவிட்டாலும் இலவசமாகவே இசை அமைத்துக் கொடுத்து விடுவாராம்.

ஆரம்பத்தில் பேண்ட் சர்ட்டுடன் டிப்டாப்பாக இருந்த இளையராஜா 80களுக்குப் பிறகு வேட்டி, ஜிப்பா, மாலை என சாமியார் ரேஞ்சுக்கு மாறிவிட்டார். அப்போது தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக பேப்பர் கூட படிப்பதில்லையாம்.

Ilaiyaraja

Ilaiyaraja

நிறைய பரீட்சார்த்த முயற்சிகள், புதுமைகளைச் செய்தவர் இளையராஜா. செனாய் என்ற வாத்தியத்தை வைத்து ஜாலி பாடலும், உருமி, மிருதங்கத்தை வைத்துக் காதல் பாடலும் கொடுத்து இருப்பார். சோக ராகத்தை சந்தோஷத்துக்கும், சந்தோஷ ராகத்தை சோகத்துக்கும் பயன்படுத்துவார்.

புதுப்புது ராகங்களைக் கண்டுபிடித்துப் பாட்டு போடுவது, உதாரணமாக நீதிகௌளை என்ற ராகத்தில் 8 பாடல்கள் போட்டுருக்காரு. இப்படி எண்ணிலடங்கா பரீட்சார்த்த முயற்சிகளில் வெற்றி அடைந்துள்ளார். அதனால் இவர் புரட்சியாளர். இசை தெய்வம் அல்ல. காலம் காலமாக இருந்து வந்த இசையைக் கட்டுடைத்து அதை எளிய மக்களிடமும் கொண்டு போய்ச் சேர்த்தவர்.

மூடநம்பிக்கையாக இருந்த சில இசைகளையும் மாற்றியவர். சிலர் இளையராஜாவை பணவெறி பிடித்தவர் என்றும் சொல்வர். அவரது இந்த வேடம் என்பதே தற்காப்புக்கான வேடம். என்னைப் பொறுத்தவரை அவர் இசைப் புரட்சி செய்த மேதை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top