Cinema History
எம்ஜிஆர் நடித்து 1200 கோடிக்கு மேல் வசூல் செய்த படம்!. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!..
தமிழ்த்திரை உலகில் தற்போது 1000 கோடி வசூல் படங்கள் என்றாலே எல்லோரும் ஆச்சரியமாகத் தான் பார்க்கிறார்கள். ரஜினி, கமல், விஜய் படங்களே இந்த இலக்கைத் தொட முடியாமல் திணறி வருகின்றனர். ஆனால் அந்தக் காலத்திலேயே புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் இந்தப் படம் 1200 கோடி வசூலை அள்ளியது என்றால் ஆச்சரியம் தான். வாங்க என்னன்னு பார்க்கலாம்.
நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் எம்ஜிஆர். 30 வருடங்களுக்கும் மேல் நாடங்களில் நடித்து பின்னர் சினிமாவில் கோலூச்சியவர். 1950 மற்றும் 60களில் இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் வசூலில் சக்கை போடு போட்டன. திரை உலகில் வசூல் சக்கரவர்த்தியாகவே இருந்தார். ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். குறிப்பாக வாள்சண்டையில் பிரபலமானார். ரசிகர்கள் வட்டம் அதிகரித்தது.
1969ல் எம்ஜிஆர், ஜெயலலிதா, அசோகன் உள்பட பலரும் நடித்து வெளியான படம் அடிமைப்பெண். கே.சங்கர் இயக்கினார். கே.வி.மகாதேவன் இசை அமைத்துள்ளார். அம்மா என்றால் அன்பு என்ற அற்புதமான பாடலை ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடினார். இது எம்ஜிஆரின் சொந்தப் படம். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் முதன் முதலாகப் பாடிய பாடலான ஆயிரம் நிலவே வா இந்தப் படத்தில் தான் உள்ளது.
‘தாயில்லாமல் நானில்லை’ என்ற பாடல் படத்தில் மிகவும் பிரபலம். டி.எம்.எஸ். பாடி அசத்தினார். இந்தப் படத்தில் தான் எம்ஜிஆருக்கும், டிஎம்.எஸ்.சுக்கும் சம்பள பிரச்சனை வந்தது. நடிகர் சந்திரபாபு எம்ஜிஆருடன் நடித்த கடைசி படமும் இதுதான்.
இதையும் படிங்க… பாக்கத்தான் ரெமோ! மகன் விஷயத்தில் அந்நியனா மாறிய விக்ரம்.. ‘பைசன்’ படத்திற்காக இப்படியா?
61ல் வெளியான இத்தாலிய திரைப்படத்தைத் தழுவித் தான் இந்தப் படத்தை எம்ஜிஆர் எடுத்தாராம். அந்தக் காலகட்டத்திலேயே இந்தப் படம் 2 கோடியே 50 லட்சம் வரை வசூல் செய்ததாக சொல்கிறார்கள். அது உண்மை எனில் இன்றைய மதிப்பில் அது 1200 கோடிக்கு மேல் இருக்குமாம்.
இப்போது பல கோடியில் உருவாகும் பட்ஜெட் படங்கள் 100 கோடி, 500 கோடி வசூல் என்கிறார்கள். இப்போது டிக்கெட் விலை 100 முதல் 250 வரை உள்ளது. ஆனால் அடிமைப்பெண் 50 லட்சத்திற்கும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். 69களில் டிக்கெட் விலை வெறும் 30 பைசாவில் இருந்து 1 ரூபாய் வரை தான் இருந்தது என்றால் நீங்களே கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.