Connect with us
SK KSR

Cinema History

60 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த சரத்குமார்.. 6 மாத சிகிச்சை!. அந்த படத்துக்கு அவ்வளவு கஷ்டப்பட்டாரா?!

சரத்குமார் – கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி என்றாலே அது சூப்பர்ஹிட் தான். புரியாத புதிர், சேரன் பாண்டியன், பேண்ட் மாஸ்டர், நாட்டாமை, நட்புக்காக, ஜக்குபாய் என சரத்குமாரை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் நாட்டாமை படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.

சமீபத்தில் சரத்குமார் ‘ஹிட் லிஸ்ட்’ படத்தின் ஆடியோ லாஞ்சில் கலந்து கொண்டு கே.எஸ்.ரவிகுமாரின் முதல் பட அனுபவங்கள் குறித்து இவ்வாறு பேசினார்.

ரவிக்குமார் இயக்கிய முதல் படம் ‘புரியாத புதிர்’. அந்தப் படத்தில் ‘நான் வில்லன்’னு என்னை புக் பண்ணிட்டார். நீங்க வரணும்னு சொன்னார். நானும் சரின்னு சொல்லிட்டேன். ஆனால் துரதிர்ஷ்டவசமா 60 அடியில் இருந்து கீழே விழுந்துட்டேன்.

பலத்த அடி பட்டு 6 மாசமா சிகிச்சையில இருந்தேன். கழுத்துல அடிபட்டு இருந்தது. கழுத்தை ஓப்பன் பண்ணி சி4 சி5 டாக்டர்கள் வந்து சர்ஜரி பண்ணினாங்க. இடுப்புல இருந்து ஒரு எலும்பை எடுத்து கழுத்துல வச்சி, இரும்பு ராடை வச்சி, நாலு ஸ்க்ரூவை வச்சி டைட் பண்ணி கழுத்தை நிக்க வச்சிட்டாங்க.

அப்படி பார்த்தா நான் தான் அயர்ன்மேன். அதுக்கு அப்புறம் 6 மாதம் பெட்ல தான் இருந்தேன். வீட்டுக்கு வந்தேன். அதுக்கு அப்புறம் சொல்ல வேண்டிய ஒன்று உள்ளது. எதுவுமே நிலையானது அல்ல. கலையுலகிற்கு மட்டுமல்ல. வாழ்க்கையும் அப்படித்தான்.

PP

PP

என்னால பேச முடியாது. அப்போ பிசியான வில்லனா நடிச்சிக்கிட்டு இருந்தேன். 11 படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கி இருந்தேன். அந்த நேரத்துல தான் இப்படி ஒரு விபத்து. அப்போ ரவிக்குமார் என்னைப் பார்க்க வந்தாரு. அப்போ நான் பேச முடியாதுங்கறதால பேப்பர் எழுதி கேட்டேன். ‘தங்கள் முன்பணத்தைத் திரும்பப் பெற வந்து இருக்கிறீர்களா?’ என்று. ‘இல்ல நீங்க நடிக்கிறீங்க’ன்னு சொன்னாரு.

அப்போ தயாரிப்பாளர் சௌத்ரி சாரும் சொல்லியிருக்கலாம். அது ஒரு இன்ஸ்பெக்டர் கேரக்டர் தானே எதுக்கு ஒரு நடிகனுக்குப் போயி வெயிட் பண்றீங்கன்னு. அவரும் என் குருநாதர் தான். ஆனா, ரவிக்குமார் ‘நீங்க தான் என் படத்துல நடிக்கிறீங்க. என்னோட முதல் படம். உங்களை புக் பண்ணிட்டேன். அது 6 மாசமா ஆனாலும் சரி. ஒரு வருஷம் ஆனாலும் சரி’ என்று சொல்லிவிட்டார்.

இதையும் படிங்க… எம்ஜிஆர் நடித்து 1200 கோடிக்கு மேல் வசூல் செய்த படம்!. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!..

அப்போ 20 கிலோ வெயிட் குறைஞ்சி இருந்தேன். அவங்க எதிர்பார்த்த சரத்குமாரா நான் இல்ல. அந்தப் படத்துல நடிக்கும்போது ரெண்டு பேருக்கும் பெரிய தகராறு. கலையுலகமே பார்த்திருக்க முடியாது. எனக்கு பஞ்சாயத்து பண்ணித் தர்ற ஒரே நாட்டாமை ரவிக்குமார் தான். சண்டை எவ்வளவு போட்டாலும் முடிஞ்சபிறகு ‘வாங்க வண்டியில உட்காருங்க. பேசிக்கிட்டே போகலாம்’னு சொல்வாரு. அப்படி ஒரு தங்கமான மனிதர் ரவிக்குமார் தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top