Connect with us

Cinema News

மன்சூர் அலி கானுக்கு நெத்தியடி!.. சுசித்ராவுக்கு மட்டும் சுத்தி வளைக்கிறாரே திரிஷா?..ஏன்மா இப்படி!..

சுச்சி லீக்ஸ் விவகாரத்துக்கு முன்னர் வரை சுசித்ரா பிரபல பாடகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சினிமா பிரபலங்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். ஆனால், சுச்சி லீக்ஸ் விவாகரத்துக்கு பிறகு பைத்தியக்காரி என்கிற பட்டத்துடன் சுசித்ரா ஆள் அட்ரஸே இல்லாமல் காணாமல் போய்விட்டார்.

அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஆரம்பத்தில் சுசித்ராவுக்கு சப்போர்ட்டாக இருந்து வந்த நிலையில், அதன் பின்னர் விவாகரத்து செய்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: யாருக்குமே இல்லாத அந்த சிறப்பு நதியாவுக்கு இருக்கு…! இதற்குக் காரணமே இவர் தானாம்..!

இந்நிலையில், சுசித்ரா பற்றி தவறான கருத்துக்களை பயில்வான் ரங்கநாதன் மூலமாக பரப்ப தனுஷ் மற்றும் கார்த்திக் குமார் ஏகப்பட்ட மோசடி வேலைகளை செய்ததாக சுசித்ரா குற்றம் சாட்டியுள்ளார். கமல்ஹாசன், தனுஷ், கார்த்திக் குமார் என பல பிரபலங்களை ஓரினச்சேர்க்கையாளர்கள் என சுசித்ரா அபாண்டமாக பழி சொல்லி வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், நடிகை திரிஷாவும் தனுஷ் டீம் தான் என்றும் தனுஷுடன் இருக்கும் அவரது போட்டோக்களை சுச்சி லீக்ஸில் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போதும் திரிஷா குறித்து சுசித்ரா பேசியுள்ளார்.

இதையும் படிங்க: என்னோட இந்த நிலைமைக்கு காரணமே ரஜினிதான்! வெங்கட் பட் பின்னனியில் இப்படி ஒரு மேட்டரா?

சமீபத்தில், திரிஷா குறித்து படுமோசமாக மன்சூர் அலிகான் பேசிய நிலையில், அவருக்கு எதிராக காட்டமான பதிலடியை திரிஷா கொடுத்திருந்தார். இந்நிலையில், சுசித்ரா பேசியதற்கு மறைமுகமாக பதிலடி கொடுப்பது போல திரிஷா பதிவிட்டுள்ள போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் சுசித்ராவுக்கு மட்டும் டைரக்ட் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சுசித்ராவுக்கு எதிராக திரை உலகம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து பல்வேறு பிரபலங்களை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் சுசித்ரா பேசி வரும் நிலையில், கைது செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: வடிவேலு – கோவை சரளா ஜோடியை பிரிக்க நினைத்த கவுண்டமணி… அப்புறம் நடந்ததுதான் ஹைலைட்..

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top