Cinema News
பல லட்சமா இருந்தாலும் தேவையில்லை!.. பைக் ஓட்டுவதில் அஜித்துக்கு இப்படி ஒரு செண்டிமெண்டா?!..
சினிமாவில் நடிப்பதற்கு முன்பே அஜித்தின் ஆசையே ஒரு பைக் ரேஸர் ஆக வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. பைக்கின் மீது அதிக காதல் கொண்ட ஒரு நபராகத்தின் அஜித் இருந்தார். இப்போதும் இருக்கிறார். பைக்கை பற்றிய எந்த விஷயம் என்றாலும் அஜித்துக்கு அத்துப்படி. அதேபோல், எந்த மாடல் பைக் என்றாலும் சரி. ரிப்பேர் ஆனால், அவரே சரி செய்து விடுவார்.
வாலிப வயதில் வீட்டுக்கு அருகே இருக்கும் ஒரு பைக் மெக்கானிக் கடையில்தான் அதிக நேரத்தை செலவழித்திருக்கிறார் அஜித். பைக் ரேஸர் ஆகி பல போட்டிகளிலும் கலந்து கொண்டு பிரபலமாக வேண்டும் என்பதே அவரின் கனவாக இருந்தார். நீ பார்க்க அழகாக இருக்கிறாய்.. மாடலிங் ஃபீல்டுக்கு போ.. சினிமாவில் நடி.. என அவரின் நண்பர்கள் சொன்னதால் சினிமாவை அவர் தேர்ந்தெடுத்தார்.
இதையும் படிங்க: விடாமுயற்சிக்கு பிறந்தது விடிவுகாலம்.. டபுள் ட்ரீட் வைத்த அஜித்.. தல ஃபேன்ஸ் ரெடியா இருங்க!..
அமராவதி படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டபோது 40 ஆயிரம் சம்பளமாக கேட்டிருக்கிறார். அது கூட ஆசையாக ஒரு பைக் வாங்கத்தான். தொடர்ந்து சினிமாவில் நடித்தபோது தனக்கு பிடித்த பைக்குகளை வாங்கினார் அஜித். சில பைக் பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றார். ஆனால், முதுகில் பல அடிகள் பட்டு சர்ஜரி செய்திருப்பதால் மனைவி ஷாலினியின் விருப்பப்படி இப்போது பைக் ரேஸில் மட்டும் அவர் கலந்துகொள்வதில்லை. இப்போது அவரிடம் பல லட்சம் மதிப்புள்ள பைக்குள் இருக்கிறது.
அதை எடுத்துகொண்டுதான் ஒவ்வொரு முறையும் பல நாடுகளிலும் சுற்றி வருகிறார். அஜித்துக்கென ஒரு பைக் கேங் இருக்கிறது. அவர்களோடுதான் பல இடங்களுக்கும் போய் பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்வார் அஜித். பொதுவாக அஜித்தின் பைக் முன்னே போகும்போது 3 பைக்குகள் ஏற்றப்பட்ட வண்டி ஒன்று அவரின் பின்னால் போகும். தேவைப்படால் அதில் ஒரு வண்டியை அவர் ஓட்டுவார்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு பின் அப்பா – அம்மாவை ஒதுக்கிய தனுஷ்!.. ஐஸ்வர்யாதான் காரணமா?!..
அதாவது, வண்டி பழுதடைந்தால் அவரே சரி செய்துவிடுவார். டயர் வெடித்துவிட்டால் அது அஜித்துக்கு பிடிக்காதாம். எனவே, அந்த பைக் எத்தனை லட்சமானாலும் அப்படியே அங்கேயே விட்டு விட்டு வந்துவிடுவாராம். அந்த பைக் இனிமேல் என் கண்ணிலே படக்கூடாது என சொல்வாராம். அப்படி ஒரு செண்டிமெண்ட் அஜித்துக்கு உண்டு.
ஒருமுறை அப்படியே ஒரு பைக்கை விட்டுவிட்டு செல்ல, உடனிருந்தவர்கள் ‘சார் இந்த வண்டி பல லட்சம். அப்படியே விட்டு வர வேண்டாம். நாங்கள் எடுத்துகொள்கிறோம். இனிமேல் உங்கள் கண்ணில் இந்த பைக் படாது’ என சொல்ல ‘என்னமோ செய்யுங்கள்.. எனக்கு இது வேண்டாம்’ என சொல்லிவிட்டு போய்விட்டாராம் அஜித்.