Connect with us
vikram

Cinema News

நடித்ததிலேயே பிடிக்காத இரு படங்கள்! பொதுவெளியில் ஒப்பனாக உடைத்த விக்ரம்

Actor Vikram: தென்னிந்தியா சினிமாவிலேயே நடிப்பு அரக்கன் என போற்றப்படும் நடிகர் சியான் விக்ரம் ஆரம்பகாலங்களில் ஒரு சில படங்களின் நடித்திருந்தாலும் சேது திரைப்படம் தான் அவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என சொல்லலாம். அதற்கு முன்பு வரை கிடைக்கிற கதாபாத்திரங்களில் நடித்தும் வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் தான் விக்ரம் பணிபுரிந்து வந்தார்.

பிரபுதேவா, அஜீத், அப்பாஸ் போன்ற பல நடிகர்களுக்கு வாய்ஸ் கொடுத்தவர் விக்ரம். இப்படி இருக்கும் சூழ்நிலையில் தான் சேதுபடம் ஒரு வரப்பிரசாதமாக அவருக்கு அமைந்தது. அந்த படத்திற்கு பிறகு அவருடைய பெயருக்கு முன் சீயான் என்ற அடைமொழியை வைத்துக்கொண்டு சீயான் விக்ரம் என இன்று வரை அழைக்கப்படுகிறார்.

இதையும் படிங்க: புதுப்பாடகர்களுக்கு ‘நோ’ சொன்ன இளையராஜா!.. ஜானகிக்கு மட்டும் அதிக வாய்ப்பு கொடுத்தது ஏன்?..

தற்போது விக்ரம் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் ஆஸ்கார் விருதை வெல்லும் என தமிழ் திரையுலகினர் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த அளவுக்கு ஒரு வித்தியாசமான கதைகளத்துடன் ஒரு புதுமையான கெட்டப்பில் விக்ரம் அந்த படத்தில் நடித்திருக்கிறார்.

அடுத்ததாக வீரதீர சூரன் என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார் விக்ரம். இந்த நிலையில் அவரிடம் நீங்கள் நடித்ததில்லையே உங்களுக்கு பிடிக்காத இரு திரைப்படங்கள் என்ன என்ற ஒரு கேள்வி முன்பு கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு மிகவும் ஓப்பனாகவே பதில் அளித்து இருக்கிறார் விக்ரம். சேது படத்திற்கு பிறகு நான் நடித்த இரு படங்கள் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

இதையும் படிங்க: பல லட்சமா இருந்தாலும் தேவையில்லை!.. பைக் ஓட்டுவதில் அஜித்துக்கு இப்படி ஒரு செண்டிமெண்டா?!..

அதில் ஒரு படம் ஆறெழுத்து உள்ள படம் என்றும் இரண்டாவது படம் 12 எழுத்து உள்ள படம் என்றும்  சூசகமாக கூறினாராம். அது என்ன படம் என்பதை சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அந்த ஏழு எழுத்து உள்ள திரைப்படம் காதல் சடுகுடு மற்றும் 12 எழுத்தில் அமைந்த திரைப்படம் விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற திரைப்படம் ஆகும்.

Continue Reading

More in Cinema News

To Top