Connect with us
GA, IR

Cinema History

இளையராஜா – கங்கை அமரன் பிரிவுக்குப் பின்னாடி இப்படி ஒரு சூப்பர்ஹிட் பாடலா.? கொல மாஸா இருக்கே!..

ஒரு பாட்டோட சூழ்நிலை சில சமயங்களில் வாழ்க்கையின் சம்பவங்களாக மாறி விடுகின்றன. அப்படித்தான் இங்கும் ஒரு சம்பவம் நடந்தது. இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் என மூவரும் ஆரம்பகாலத்தில் இருந்து ஒன்றாக வளர்ந்து வந்தவர்கள். இசை, பாட்டு என அவர்களது வாழ்க்கை நகர்ந்தது. எங்கு வேலையில் இருந்தாலும் லஞ்ச் டயத்திற்கு மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்களாம். அது தான் அவர்களுக்கு கிடைக்கும் ஒரே நேரம். அந்த வகையில் அவர்கள் அந்த நேரத்தில் தான் இன்ப துன்பங்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வார்களாம். இது இப்படி தொடர்ந்து கொண்டு இருக்க ஒரு படத்திற்கு பாடல் எழுதும்போது கங்கை அமரனுக்கும், இளையராஜாவுக்கும் இடையில் விரிசல் விழுந்து விட்டது.

இளையராஜா ஒரு முறை கங்கை அமரனுக்கு பாடலுக்கான சிட்டியுவேஷனை சொல்லி டியூன் போட்டுக் கொடுக்க அதற்கு பாடல் எழுதச் சொன்னாராம். அன்று லஞ்ச் டயத்தில் மூவரும் ஒன்றாக அமர்ந்துள்ளனர். அப்போது இளையராஜா கங்கை அமரன், பாஸ்கர் இருவரையும் நீங்க வேறு எங்காவது போய் சாப்பிடுங்க. இங்க உட்காராதீங்கன்னு சொல்லி அனுப்பி வி;ட்டாராம். ‘என்னண்ணே இப்படி சொல்றீங்க… இந்த நேரம் தான் நமக்குக் கிடைக்கிற நேரம். உன் சாப்பாட்டுக்காகவா நாங்க வர்றோம். நமக்குள்ள இருக்குற சுக துக்கங்களைப் பரிமாறிக்கலாம்னு தான வாரோம். அதுக்குப் போய் நீ இப்படி சொல்றீயே?’ன்னு கங்கை அமரன் கோபப்பட்டாராம்.

Dharma durai

Dharma durai

அதைப் பெரிதுபடுத்தாத இளையராஜாவும் விடாப்பிடியாக அவரை அனுப்பி விட்டாராம். கோபத்தில் அங்கு இருந்து கிளம்பிய கங்கை அமரனும், பாஸ்கரும் வேறு இடத்தில் சென்று சாப்பிட்டார்களாம். அதன்பிறகு இளையராஜா சொன்ன டியூனுக்கு மனதில் வந்த அத்தனை கோப உணர்வுகளையும் வார்த்தைகளால் கண்டபடி ஒரு பேப்பரில் எழுதிக் கொட்டித் தீர்த்து விட்டாராம்.

‘இந்தப் பாடலைக் கண்டிப்பாக அண்ணன் ஏற்றுக் கொள்ள மாட்டார். இருந்தாலும் இதுதான் பாடல் என்று கொடுத்து விட வேண்டியது தான்’ என்று முடிவு பண்ணி அதை ஸ்டேப்ளர் பின் போட்டு எடுத்துக் கொண்டு நேராக இளையராஜாவிடம் கொடுத்து விட்டாராம். ‘இதுதான் பாடல். நீ பயன்படுத்தினாலும் சரி. இல்லாவிட்டாலும் சரி’ என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டாராம். அதைப் படித்துப் பார்த்த இளையராஜாவுக்கு ஏற்றப் பாடலாகி விட்டது. அவர் போட்ட டியூனில் கரெக்டாக அந்தப் பாடல் உட்கார, பாட்டு சூப்பர்ஹிட்டாகி விட்டது. அதுதான் தர்மதுரை படத்தில் வரும் ‘ஆணென்ன பெண்ணென்ன’ பாடல்.

இதையும் படிங்க… பார்வையாலே பாடம் நடத்திய விஜயகாந்த்!.. அது புரியாம ‘திருதிரு’வென முழித்த இயக்குனர்…!

இந்தப் பாடலில் தம்பிகளை கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் ரஜினி அவர்களைக் காண ‘தொளதொள’ பேண்ட், சர்ட், தொப்பி சகிதம் வந்து நிற்க எல்லோரும் அவரை வைத்துக் காமெடி பண்ணுகிறார்கள். அப்போது ஒருவர் அவரது பேண்டை உருவி விட்டு, தொப்பியைத் தூக்கி வீச அவமானத்தில் கூனி குறுகி நிற்கிறார். அப்போது ஓடி வந்து அவரது தம்பி பாரம்பரியமான வேட்டி சட்டையை அவருக்குப் போட்டு விடுகிறார். அப்போது ரஜினி பாடும் பாடல் தான் இது. படத்திற்கும் சரி, உண்மையான கங்கை அமரனின் சூழலுக்கும் சரி. பாட்டு 100 சதவீதம் பொருந்தியது. அங்கிருந்து தான் கங்கை அமரன், இளையராஜாவின் பிரிவு ஆரம்பமானது.

மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், பத்திரிகையாளருமான செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top