இப்படிப்பட்டவரா எம்.ஜி.ஆர்?!.. சோ-வை மிரள வைத்த இரண்டு விஷயங்கள்!.. அட செமயா இருக்கே!..

Published on: May 18, 2024
cho ramasamy
---Advertisement---

60களில் எம்.ஜி.ஆருடன் நடித்த நகைச்சுவை நடிகர்களில் சோ ராமசாமியும் ஒருவர். சோ ராமசாமி எப்போது வாய் துடுக்கானவர். அதோடு நல்ல அறிவாளியும் கூட. சில எம்.ஜி.ஆரையே கிண்டலடித்து அவரிடமே பேசிவிடுவார். துவக்கத்தில் சினிமாவில் நடிக்கும் ஆசையே சோ-வுக்கு இல்லை.

ஏனெனில், அவர் பல நாடகங்களில் நடித்து வந்தார். நாடகத்தில் கூட இயக்குனர் சொல்லாத ஒரு வசனத்தை பேசி விடுவார். எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார். இதனால் சினிமாவில் நடிக்க அவர் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், சிலர் வற்புறுத்தியதால் சினிமாவில் நடித்தார்.

இதையும் படிங்க: விருது வாங்க போக கார் கூட இல்லாத நடிகை!.. எம்.ஜி.ஆர் செய்தது இதுதான்!.. நெகிழ்ச்சி சம்பவம்!…

சினிமாவில் நடித்தாலும் எல்லோரையும் சகட்டு மேனிக்கு சோ விமர்சனம் செய்வார். ஏனெனில் மனதில் பட்டதை அப்படியே பேசும் பழக்கம் கொண்டவர் அவர். அரசியலில் ஈடுபடவில்லையே தவிர அரசியலை கூர்ந்து கவனிப்பவர் சோ. அதனால், எம்.ஜி.ஆரின் அரசியல் நடவடிக்கைகளையும் அவர் பலமுறை விமர்சனம் செய்திருக்கிறார்.

cho

அதே சோ எம்.ஜி.ஆரை இரண்டு விஷயங்களுக்காக மனம் விட்டு பாராட்டி இருக்கிறார். ஒருமுறை நாடகம் ஒன்றில் நடிப்பதற்காக மும்பை போனார் சோ. அப்போது அவரை பார்த்த ஒரு வயதான பெண்மணி அவரிடம் சென்று ‘தம்பி உன்னை எம்.ஜி.ஆரின் படங்களில் பார்த்திருக்கிறேன். தலைவரை நலம் விசாரித்ததாக சொல்’ என சொன்னார். அவரின் பெயர், இடம் என எதுவும் சொல்லவில்லை., சோ வியந்து போனார்.

இதையும் படிங்க: இனிமே ரசிகர்களை ஏமாத்த முடியாது.. அரசியலுக்கு போறேன்!.. எம்.ஜி.ஆர் சொன்னது இதுதான்!…

அடுத்து சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் என்கிற பழைய நடிகர் ஒருவர் இருந்தார். அவரிடம் சோ பேசிகொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர் பற்றி பேச்சு வந்தது. அப்போது சோ விடம் ‘வீட்டில் உலை வைத்து விட்டு இன்னைக்கு வீட்டில் சோறு பொங்கும் என்கிற நம்பிக்கையோடு ஒருவரை பார்க்கலாம் என்றால் அது எம்.ஜி.ஆர் மட்டுமே’ என சொன்னார் வெங்கட்ராமன்.

Cho
Cho

 

‘எத்தனை பேருக்கு இப்படி பாராட்டு கிடைக்கும். எம்.ஜி.ஆருக்கு நிகர் அவரே. மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார். அவர் செய்த பல உதவிகள் வெளியே தெரியாது’ என மனம் விட்டு பாராட்டியிருக்கிறார் சோ. இந்த சோ-தான் கடைசி வரை கலைஞர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.