Connect with us

Cinema News

ஸ்டார் ஸ்போர்ட்ஸில் இந்தியன் 2 அப்டேட்!.. ஷங்கருடன் இணைந்து கமல்ஹாசன் கலக்கல்.. ஆடியோ லாஞ்ச் எப்போ?

இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த படத்தின் ரிலீஸ் ஜூலை மாதம் தள்ளிப் போவதாக இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது கலந்து கொண்ட கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் இந்த மெகா அப்டேட்டை கொடுத்துள்ளனர்.

கமல்ஹாசன் நடிப்பில் பல ஆண்டுகளாக உருவாக்கி வரும் இந்தியன் 2 திரைப்படம் இந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக வரும் ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: காத்து கொஞ்சம் வேகமா அடிச்சாலே மானம் போயிடும்!.. கிறுகிறுக்க வைத்த கியாரா அத்வானி!..

மும்பையில் உள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலுவலகத்திற்கு சென்ற கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் தொகுப்பாளர்கள் உடன் இணைந்து இந்தியன் 2 படத்தின் அப்டேட்களை கொடுத்துள்ளனர்.

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாபச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கல்கி திரைப்படம் ஜூன் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதன் காரணமாக ஜூலை மாதத்திற்கு இந்தப் படம் தள்ளிப் போனதா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: எனக்கு ஜோடியா யாருமே நடிக்க மாட்றாங்க!.. நடிகையிடம் புலம்பிய சத்தியராஜ்…

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன் மெட்ராஸை சென்னை என மாற்றியபோது இந்த பெயரை அனைவரும் அழைப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் உலகமே சென்னை சூப்பர் கிங்ஸ் என கொண்டாடுவது மகிழ்ச்சியை தருகிறது என்றார். மேலும், எலைட் குடும்பத்திலிருந்து தோனி கிரிக்கெட் விளையாட வரவில்லை என்றும் அவரது சாதனை மிகப் பெரியது என்றும் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

அதேபோல விராட் கோலியின் கடும் முயற்சிக்கு நிச்சயம் அடுத்த ஆண்டு கோப்பை கிடைக்க வேண்டும் என்றும் இந்தாண்டு கோப்பை எங்களுக்குத்தான் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உலகநாயகன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இளையராஜா பயோபிக்!.. இசைஞானி எடுத்த முக்கிய முடிவு!.. அட இது நல்லா இருக்கே!..

google news
Continue Reading

More in Cinema News

To Top