Cinema History
இளையராஜா காப்பி அடித்த பாடல்கள்… பாக்கியராஜ் கங்கை அமரனுடன் சேர்ந்தது இதற்குத் தானா..?!
இளையராஜாவின் பாடல்கள் பற்றியும், பாக்கியராஜ் உடன் கைகோர்த்தது பற்றியும் கங்கை அமரன் இப்படி பேசியுள்ளார்.
‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாடல் ‘ஜனனீ ஜனனீ ‘ என்ற ராகத்தோடு ஒத்துப் போவது போல இரண்டு பாடல்களின் வரிகளையும் சேர்த்துப் பாடுகிறார் கங்கை அமரன். ஒரு இசை அமைப்பாளருக்கு அடையாளம் கிடைக்கணும்னா நிலைச்சு நிற்கக்கூடிய பாடல்களில் அவரோட பங்கு இருக்கணும். வெறும் பாட்டும், இசையும் நிற்காது. வார்த்தைகள் இல்லாமல் வளங்கள் இல்லை.
‘காதல் கசக்குதய்யா…’. என்ற இளையராஜாவின் பாடலைப் பாடும் கங்கை அமரன் அதே ராகத்தில் உள்ள எம்ஜிஆரின் ‘நடையா இது நடையா’ பாடலையும் மிக்ஸ் செய்து பாடிக்கொண்டே இடையில் சொருகி விடுகிறார் கங்கை அமரன். வாங்க அவர் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.
இதையும் படிங்க… மறுபடியும் முதல்ல இருந்தா? ஹீரோயினாக நடிக்கும் வனிதா.. ஹீரோ யாருனு தெரியுமா?
மணிரத்னம் இயக்கிய பகல்நிலவு படத்தில் இசை இளையராஜா, பாடல்கள் கங்கை அமரன் என்று வரும். அவ்வளவும் அற்புதமான பாடல்கள். என்னமோ தெரியல. என்ன மாயமோ தெரியல. அதுக்கு அப்புறம் என்னைப் பாட்டு எழுதக் கூப்பிடவே இல்ல. நல்லா தானே எழுதுனேன். ஏதாவது குறை இருக்கா?
சுவரில்லாத சித்திரங்கள் பண்ணும்போது எனக்கு மியூசிக் சான்ஸ் வருதுன்ன உடனே, ‘உனக்குலாம் என்னடா மியூசிக் தெரியும். கிளம்பு… என் பேரைக் கெடுக்கறதுக்கா இருக்க? போடா’ன்னு என்னைத் துரத்திட்டாரு அண்ணன் இளையராஜா. அந்தப் பக்கம் பார்த்தா ‘உனக்கு என்னடா ரெண்டு படம் ஒர்க் பண்ணிட்டு உனக்கு என்ன அசிஸ்டண்ட் டைரக்டரா இருந்துக்கிட்டு உனக்கு எல்லாம் படம்’னு பாரதிராஜா பாக்கியராஜைத் துரத்திட்டாரு. இதுவரை சொல்லல. ஆனா இதுதான் உண்மை.
அதுக்கு அப்புறம் நாங்க ரெண்டு பேரும் இணைந்த படங்கள் அற்புதமான வெற்றிகள். சுவரில்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள், பாமா ருக்மணி, புதிய வார்ப்புகள் அப்படின்னு எங்களது தொடர்புகள் அதிகம் என்றார் கங்கை அமரன்.
இதையும் படிங்க… ‘முடிஞ்சா எழுதிப்பாரு…’ பாடலாசிரியர்களுக்கு சவால் விட்ட இளையராஜா… அசத்திய வைரமுத்து
இளையராஜா காப்பி அடிச்சிருக்காரு. அதை நான் சொல்லக்கூடாது. அவரு தான் சொல்லணும். நானும் காப்பி அடிச்சிருக்கேன். எனக்கு ஒரு படம் வந்தது. ‘காதலி அந்தப் பக்கம். காதலன் இந்தப் பக்கம். ரெண்டு பேரும் பார்த்துக்க முடியல. ஒரு பாட்டு வேணும்’னு கேட்டாங்க. ‘பாட்டுக்கு பாட்டெடுத்து என்ற பாடலை மாதிரி வேணும்’னு சொன்னாங்க. அதுக்கு என்ன அதையே டியூனா போட்டா போச்சுன்னு ‘பொன்மானைத் தேடி நானும் பூவோட வந்தேன்’னு பாடலை போட்டேன்.
நான் இளையராஜா பாட்டை அப்படியே தூக்கி மாத்திருக்கேன். பாக்கியராஜ் என்ன பண்ணினாருன்னா இளையராஜாகிட்ட இல்லாத டியூனு எல்லாம் இவருக்கிட்ட இருக்கும்னு நினைச்சி இவரை நம்ம படத்துக்குப் போட்டா மியூசிக் எல்லாம் இளையராஜா மாதிரியே கிடைச்சிரும்னு நினைச்சாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.