நல்லா இருந்த அஜித்தை இப்படி நாரடிச்சிட்டாரே ஆதிக் ரவிச்சந்திரன்!.. அந்த கையை கவனிச்சீங்களா?..

Published on: May 19, 2024
---Advertisement---

விடாமுயற்சி திரைப்படம் இதற்கு மேல் வர்மா என்பதே பெரிய சந்தேகமாக மாறிவிட்டது. அஜித் அந்தர் பல்டி அடித்து காரில் பக்கத்தில் இருந்த ஆரவை எல்லாம் அலற விட்டு இருந்தார். கடைசியாக அந்த முயற்சி எல்லாம் வீண் முயற்சி ஆகி விடுமோ என ரசிகர்கள் மனவேதனை படத் தொடங்கிவிட்டனர்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்து வந்த விடாமுயற்சி திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் அஜித் அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தின் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் போஸ்டரோன்னு நினைச்சிட்டேன்!.. இந்தியன் 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வந்துடுச்சு!..

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி அஜித் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் அஜித் பழைய மாதிரி மங்காத்தா அளவுக்கு மிரட்டலாக குட் பேட் அக்லி படத்தில் நடிக்கப் போகிறாரா என பலரும் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

குட் பேட் அக்லி படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப நடிகர் அஜித் ரொம்ப அக்லியாக அசிங்கமா நடுவிரல் எல்லாம் காட்டிக் கொண்டு போஸ் கொடுத்துள்ளது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

இதையும் படிங்க: 12 வயலின்.. 10 ஆயிரம் சம்பளம்!.. இளையராஜா போட்ட கிளாசிக் பாடல்கள்!.. அட அந்த படமா?!…

ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் அஜித் நடிக்கிறார் என்றதுமே பஹீரா படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன் தான். அந்த படத்தில் பெண்களுக்கு எதிரான படு மோசமான வசனங்களை பிரபுதேவாவுக்கு அவர் கொடுத்திருப்பார் என ட்ரோல் செய்தனர்.

இந்நிலையில், ஆரம்பத்திலேயே ஆபாசமாக அஜித் போஸ் கொடுத்துள்ள நிலையில் படத்தில் இன்னும் என்ன என்ன அடல்ட் கண்டெண்ட் இருக்குமோ என்கிற அச்சம் பொது எழத்தான் செய்கிறது.

இதையும் படிங்க: கை முழுவதும் டாட்டூ! வித்தியாசமான கெட்டப்பில் அஜித்.. வெளியான குட் பேட் அக்லியின் போஸ்டர்

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.