Cinema History
அவர் வந்தாத்தான் கல்யாணம்!.. தீவிர ரசிகன் செய்த வேலை!.. எம்.ஜி.ஆர் என்ன பண்ணார் பாருங்க!..
நடிகர் எம்.ஜி.ஆருக்கு இருந்தது போல வெறித்தனமான ரசிகர்கள் யாருக்கும் இருந்திருக்க மாட்டார்கள். ரசிகர்கள் என்பதை விட அவரை கடவுளாக பார்க்கும் பக்தர்களாகவே பலரும் இருந்தார்கள். அவர்கள் எல்லோருமே ஏழைகள், ரிக்ஷா ஓட்டுபவர்கள், கூலித் தொழிலாளிகள் மற்றும் மீனவர்களாக இருந்தார்கள். அதனால்தான் அவர்களுக்கும் பிடிக்கும்படி தனது திரைப்படங்களில் காட்சிகளை வைப்பார் எம்.ஜி.ஆர்.
படகோட்டி மற்றும் மீனவ நண்பன் ஆகிய படங்களில் மீனவராகவே நடித்திருப்பார். எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் அவருக்கு ஒன்றென்றால் பதறி விடுவார்கள். திரையில் அவர் வில்லன் நடிகரிடம் அடி வாங்குவதை கூட பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். நடிகர் நம்பியார் எம்.ஜி.ஆர் படங்களில் வில்லனாக நடித்ததாலேயே அவரை எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு பிடிக்காது.
இதையும் படிங்க: விருது வாங்க போக கார் கூட இல்லாத நடிகை!.. எம்.ஜி.ஆர் செய்தது இதுதான்!.. நெகிழ்ச்சி சம்பவம்!…
எங்க வீட்டு பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆரை நம்பியார் சவுக்கால் அடிப்பது போல காட்சி வரும். இந்த காட்சியை பார்த்துவிட்டு தியேட்டரிலிருந்து ஒரு கும்பல் அப்படியே கிளம்பி நம்பியாரின் வீட்டுக்கு போய் விட்டார்கள். ‘நம்பியார் எப்படி எங்கள் தலைவரை அடிக்கலாம்?’ என பெரிய பிரச்சனையே செய்துவிட்டார். நம்பியார் உடனே எம்.ஜி.ஆருக்கு போன் செய்து நிலைமையை விளக்க, எம்.ஜி.ஆர் அங்கு சென்று அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்த கதையெல்லாம் நடந்திருக்கிறது.
புதுச்சேரி மீனவ குப்பத்தில் எம்.ஜி.ஆரின் வெறித்தனமான ரசிகர் ஒருவர் இருந்தார். தன்னுடைய திருமணத்தை எம்.ஜி.ஆர் வந்து நடத்தி வைக்க வேண்டும் என அவர் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் முகவரிக்கு கடிதம் எழுதினார். எம்.ஜி.ஆர் ஒருமுறை புதுச்சேரி சென்றிருந்த போது அந்த இளைஞரை அழைத்து வர சொன்னார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பாணியில் கதை சொல்லி ராமராஜனை சம்மதிக்க வைத்த பிரபலம்!.. அட அந்த படமா?!…
ஆனால், தன்னுடைய திருமணத்தை எம்.ஜி.ஆர் நடத்தி வைக்க வேண்டும் என்பதில் அந்த இளைஞர் உறுதியாக இருந்தார். அதோடு ஒரு வருடமாக தாடி வளர்த்திருந்தார். அவரின் வீடு இருக்கும் பகுதிக்கு சென்றால் ஜீப்பின் டயர்கள் மணலில் மாட்டிக்கொள்ளும் நிலை இருப்பதாக அதிகாரிகள் சொன்னார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் ‘அவன் என் ரசிகன். எத்தனை மாதம் திருமணம் செய்யாமல் எனக்காக காத்திருப்பான்?’ என சொல்லி அங்கு போனார். ஜீப்பின் டயர் மணலில் சிக்கிக்கொண்டது.
அங்கிருந்த மீனவர்கள் ஜீப்பை அலேக்காக தூக்கி வேறு இடத்தில் நிறுத்தினார்கள். எம்.ஜி.ஆர் வந்திருப்பதை கேள்விப்பட்டு ஓடோடி வந்த அந்த ரசிகன் எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து வணங்கினார். தாடியை எடுத்துவிட்டு 10 நிமிடத்தில் திருமணத்திற்கு தயாராகி வந்தார். அவரின் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திய எம்.ஜி.ஆர் அன்பளிப்பும் கொடுத்துவிட்டு வந்தார்.