Connect with us

Cinema News

சிம்பு இன்னும் திருந்தல!.. தங்கத்தட்டுல வச்சு தாங்குற தயாரிப்பாளரை நோகடிக்கலாமா?.. பிரபலம் கேள்வி!..

நடிகர் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தயாரித்த வேல்ஸ் நிறுவன தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு எதிராக ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்கிற அளவுக்கு பிரச்சனை செய்ய சிம்பு விடலாமா? சிம்பு தற்போது பழையபடி படப்பிடிப்புகளுக்கு லேட்டாக செல்லாமல் சரியான நேரத்தில் சென்று படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இன்னமும் திருந்தாமல் ஐசரி கணேஷ் விவகாரத்தில் சிம்பு இப்படி நடந்து கொள்வது சரி இல்லை என வலைப்பேச்சு அந்தணன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகர் சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சைக்காக சென்ற போது அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்துக் கொடுத்தது ஐசரி கணேஷ் தான் என்றும் சிம்புவுக்காக ஹெலிகாப்டர் வரவழைத்து மாஸ் காட்டினார்.

இதையும் படிங்க: நல்லா இருந்த அஜித்தை இப்படி நாரடிச்சிட்டாரே ஆதிக் ரவிச்சந்திரன்!.. அந்த கையை கவனிச்சீங்களா?..

மேலும், ஓடாத வெந்து தணிந்தது காடு படத்தை வெற்றி படம் என அறிவித்து நடிகர் சிம்புவுக்கு கார், படத்தை இயக்கிய கௌதம் மேனனுக்கு புல்லட் என வாங்கிக் கொடுத்தது மட்டுமின்றி சிம்புவை வைத்து அடுத்தடுத்து படங்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளார்.

கொரோனா குமார் கதை பிடிக்கவில்லை என்றாலோ அல்லது அந்த படத்தின் இயக்குனரை பிடிக்கவில்லை என்றாலோ அது தொடர்பாக ஐசரி கணேஷ் உடன் சிம்பு பேச்சுவார்த்தை நடத்தினாலே பிரச்சனை தீர்ந்து விடும். அதை விடுத்து விட்டு, அந்த கம்பெனியில் இருந்து தாவி தற்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தில் எஸ்டிஆர் 48 மற்றும் தக் லைஃப் உள்ளிட்ட படங்களில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்தது ஏன் என்கிற கேள்வியை அந்தணன் எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: 12 வயலின்.. 10 ஆயிரம் சம்பளம்!.. இளையராஜா போட்ட கிளாசிக் பாடல்கள்!.. அட அந்த படமா?!…

வேல்ஸ் நிறுவனத்துக்கு தொடர்ந்து மூன்று படங்களை சிம்பு நடித்து தருவதாக வாக்குறுதி அளித்த நிலையில் தற்போது அதை மறந்துவிட்டு வெந்து தணிந்தது காடு 2ம் பாகத்தையும் முடித்து கொடுக்காமல் சிம்பு இருப்பது நியாயமான செயல் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top