Cinema News
கனகாவ பாத்து அப்படியே ஷாக் ஆயிட்டேன்!.. எதுவும் சொல்ல விரும்பல!.. பீலிங்ஸ் காட்டும் ராமராஜன்!..
கரகாட்டக்காரன் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஜோடிதான் ராமராஜன் – கனகா. இந்த படத்தில்தான் கனகா அறிமுகமானார். கரகாட்டம் ஆடும் துடுக்கான பெண்ணாகவும், ராமராஜனை விரும்பும் பெண்ணாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ரஜினி, கமலே வியந்து பார்க்கும்படி வசூலை அள்ளியது இந்த திரைப்படம்.
பழம் பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா. அம்மாவை விட்டு அப்பா சென்றுவிட்டார். அம்மாவின் வளர்ப்பில் வளர்ந்த கனகாவுக்கு எல்லாமே அம்மாதான். கரகாட்டக்காரன் வெற்றிக்கு பின் ரஜினி உட்பட பல நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தார் கனகா. அதில், பல படங்கள் வெற்றிதான்.
இதையும் படிங்க: நான் செகண்ட் ஹீரோவா?!.. விஜயகாந்த் படத்தில் நடிக்க மறுத்த ராமராஜன்!..
கனகாவின் கால்ஷிட், சம்பளம் என எல்லாவற்றையும் அவரின் அம்மா தேவிகாதான் பார்த்துகொண்டார். ஆனால், அவரும் இறந்துபோகவே தடுமாறிய கனகா சில மேனேஜர்களை நியமித்தார். யாரும் நீடிகக்வில்லை. ஒருபக்கம், அப்பா தனது சொத்துக்களை பறித்துக்கொள்வார் என பயந்த கனகா வீட்டை விட்டே வெளியே வரவில்லை.
சினிமாவில் நடிப்பதையும் நிறுத்திவிட்டார். மனதளவில் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், யாரிடமும் அவர் பேசுவதில்லை எனவும் செய்திகள் வெளியானது. ஒருமுறை அவரின் வீட்டில் தீ பிடித்தபோதும் கூட தீயணைப்பு வீரர்கள் உள்ளே போக அவர் அனுமதிக்கவில்லை. கதவை உடைத்துதான் உள்ளோ போனார்கள்.
இதையும் படிங்க: இளையராஜாவிடம் அடம்பிடித்த ராமராஜன்.. சாமானியன் படத்துல யாருமே பார்க்காத ஒண்ணு இருக்காம்!
அரிதாக எப்போதுதாவது கனகாவின் புகைப்படம் வெளியாகும். சில வருடங்களுக்கு முன்பு கனகாவே ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவரின் முகத்தை பார்த்த எல்லோரும் ‘இதுதான் கனகாவா?’ அதிர்ந்து போனார்கள். இந்நிலையில், நடிகர் ராமராஜன் ஊடகம் ஒன்றில் பேசும்போது கனகா பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
ஒருமுறை ஒரு ஷூட்டிங்கில் இருந்தபோது ‘உங்களை பார்க்க கனகா வந்திருக்கிறார்’ என சொன்னார்கள் ‘எங்கே?’ என ஆர்வமாக கேட்டுவிட்டு அவரை தேடிப்போனேன் அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு பெண்மணியிடம் ‘கனகா எங்கே?’ என்று கேட்டார். அதற்கு அவர் ‘நான்தான் கனகா’ என்று சிரித்தார். வெயிட் போட்டு குண்டாக மாறி தலை முடியெல்லாம் சிவப்பு நிற டை அடித்து வெள்ளைக்காரி போல இருந்தார். அதிர்ந்து போய்விட்டேன். அதற்கு மேல் அதை பேச விரும்பவில்லை’ என கூறினார் ராமராஜன்.